பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/05/2012

யு.ஜி.சி. விதிமுறை: திணறும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்

புதுடெல்லி: நாட்டில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், பல்கலை மானியக் குழு பரிந்துரைத்த 2010ம் ஆண்டுக்கான விதிகளை பின்பற்ற முடியாமல் திணறி வருகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம், யுஜிசி-யிடம் இருந்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், 2010ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்தியது தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பலமுறை இதுதொடர்பாக வலியுறுத்தப்பட்ட போதிலும் சில கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில் சுணக்கம் காட்டுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாக் (NAAC) சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், யுஜிசி பிறப்பித்த 2010ம் ஆண்டுக்கான விதிமுறைகளை பின்பற்றத் தவறும் கல்வி நிறுவனஙக்ள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. தேவை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் தயங்க மாட்டோம் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 29 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், யு.ஜி.சி.யால் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை, 16 பல்கலைக்கழகங்கள் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.
 
ஆனால், யு.ஜி.சி. பிறப்பித்த விதிமுறைகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற உத்தரவுகளை யு.ஜி.சி. மற்றும் நாக் பிறப்பிப்பது, நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுத்து விடும் என நிகர் நிலைப் பல்கலைக்கழக தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பற்றி ஏற்கனவே குரல் கொடுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், உச்ச நீதிமன்றத்தில் டான்டன் கமிட்டி விவகாரம் முடிவுக்கு வந்த பின்னரே, யுஜிசி விதிமுறைகள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்ததையும் அவர் குறிப்பிட்டார்.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்த யாரும், அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை வகிக்கக் கூடாது என்று 2010ம் ஆண்டு யுஜிசி வெளியிட்ட விதிமுறையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தால் மட்டுமே நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த உத்தரவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக