பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

11/29/2012

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் நாளை உலக படிக்கும் நாள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் நாளை உலக படிக்கும் நாள்
கடைப்பிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நாளில்
பாடத்தை தவிர்த்து பொது அறிவு நூல்கள், பத்திரிக்கைகள், முக்கிய அரசியல்
கட்சி தலைவர்கள் குறித்த பாடங்களை படிக்க செய்ய வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வேல்டு டே நவம்பர் மாதம் 30ம் தேதி
கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் உலக
வேல்டு டே இதுவரை கொண்டாடியதாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது. உலக
படிக்கும் நாள் (வேல்டு ரீடிங் டே) தமிழகத்தில் இந்த ஆண்டு நாளை கொண்டாட
கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி
அதிகாரிகள் ஆகியோருக்கு கல்வித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் நாளை (30ம் தேதி) உலக படிக்கும் நாள் பள்ளிகளில் கண்டிப்பாக கொண்டாட
வேண்டும். இதன்படி நாளை அனைத்து பள்ளிகளிலும் பாடங்களை தவிர பொது அறிவு
நூல்கள், கலை, இலக்கியம் சம்பந்தமான புத்தகங்கள், அறிவியல், கம்ப்யூட்டர்
சம்பந்தமான புத்தகங்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பற்றிய
விபரங்கள், பழைய வரலாறுகள் உள்ளிட்ட தகவல் அடங்கிய புத்தகங்களை மாணவ,
மாணவிகள் வாசிக்க செய்ய வேண்டும். அதோடு நாளைய தமிழ் மற்றும் ஆங்கில தினசரி
பேப்பர்களை படிக்க செய்ய வேண்டும். கண்டிப்பாக பாடம் அல்லாத புத்தகங்களை
மாணவ, மாணவிகளை கண்டிப்பாக வாசிக்க செய்து உலக படிக்கும் நாளை கல்வித்துறை
அனைத்து பள்ளிகளிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வேல்டு ரீடிங் டே
குறித்த விபரத்தை முதன்மை கல்வி அதிகாரி ராமச்சந்திரன் தெரிவித்து
பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் அல்லாத பொது அறிவு நூல்கள் உள்ளிட்ட
புத்தகங்களை வாசிக்க செய்ய வேண்டும். இது சம்பந்தமான நடந்த நிகழ்ச்சியை
போட்டோவுடன் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று
தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (1ம் தேதி) அனைத்து
பள்ளிகளிலும் எய்ட்ஸ் ஒழிப்பு தினம் கொண்டாட வேண்டும் என்றும், எய்ட்ஸ்
நோய் சம்பந்தப்பட்ட தகவல்கள், அந்த நோய் எப்படி வருகிறது, அந்த நோயாளிகளை
சமுதாயத்தில் எப்படி பார்த்து கொள்ள வேண்டும். சிகிச்சை முறைகள் உள்ளிட்ட
விபரங்களை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு
உத்தரவிட்டுள்ளது.
இதனால் நாளையும், நாளை மறுநாளும் பள்ளிகளிலும்
பாடத்தை தவிர்த்து இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்பு
ஏற்பட்டிருப்பதாகவும், தமிழகத்தில் முதல் முதலாக கல்வித்துறை சார்பில் நாளை
தான் உலக படிக்கும் நாள் கொண்டாடப்படுவதாகவும், இதற்கு முன்னர் இதுபோன்று
கொண்டாட வில்லை என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக