தமிழகம் முழுவதும், எஸ்.எஸ்.எல்.சி.,
பொதுத்தேர்வுகள், நாளை மறுநாள் துவக்க உள்ளன. அதில், அதிக கவனத்தை கையாளும்
வகையில், தேர்வு மைய பள்ளிகளில் உள்ள, "ஜெராக்ஸ்" இயந்திரம் உள்ள அறைகளை
பூட்டி, சீல் வைக்க வேண்டும், என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள், 27ம் தேதி
துவங்கி, ஏப்., 12ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8
லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வெழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வின் போது, திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சியில் உள்ள
பள்ளிகளில், தேர்வுக்கு அரைமணி நேரம் முன்னதாக, பள்ளியில் இருந்த ஜெராக்ஸ்
மிஷின் மூலம் வினாத்தாள், "ஜெராக்ஸ்" எடுத்து வினியோகிக்கப்பட்டதாக
புகார்கள் எழுந்தன. அப்பள்ளிகள் மீது பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை
எடுத்து வருகிறது.
'
நாளை மறுநாள், 10ம் வகுப்பு தேர்வுகள் துவக்கவுள்ள நிலையில், தேர்வு
மையங்கள் அமையவுள்ள பள்ளிகளுக்கு, பல்வேறு அதிரடி உத்தரவுகள்
பிறப்பிக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் அமைக்கப்படும் பள்ளிகளில் உள்ள,
ஜெராக்ஸ் இயந்திரம் உள்ள அறைகள், தேர்வுக்கு முதல்நாளே பூட்டி, சீல் வைக்க
வேண்டும். தேர்வு நடத்தும் அலுவலர்கள், அதை உறுதி செய்யவேண்டும்.
மேலும், தேர்வு மைய பள்ளிகளின் பட்டியலை பெற்றுள்ள மின் வாரிய அதிகாரிகள்,
தடையில்லா மின்சாரம் வழங்க திட்டமிட்டு உள்ளனர். ஆனாலும், ஜெனரேட்டர்
தயார் நிலையில் வைக்குமாறு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், தேர்வு மைய
பள்ளிகளுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக