சிவகங்கையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
அலுவலகம் முன்பு அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக தமிழாசிரியர் கழக மாநில துணைத் தலைவர் இளங்கோ வரவேற்று ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.
தமிழினப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபட்சவைக் கண்டித்தும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியும், தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்திட வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டி, மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் உதயசங்கர், உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் சங்க மாநில உயர்நிலைக் குழு உறுப்பினர் சின்னையா அம்பலம், ஆங்கில மொழியாசிரியர் கழக மாநில பொதுச் செயலர் சேவியர், தமிழாசிரியர் கழக மாவட்டப் பொறுப்பாளர் நாகேந்திரன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் சங்கர், வரலாற்று ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலர் பழனியப்பன், பகுதி நேர ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் குமரேசன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக