அரசு / ஊராட்சி
ஒன்றியப் பள்ளிகளில் CCE சார்பான பதிவேடுகள் மற்றும் மதிப்பெண் அட்டைகள்
ஆகியவற்றில் ஆசிரியர்களின் சுமையை குறைப்பது மற்றும் CCE செயல்திறன் பற்றி
அறிய "BEE EDUSYS" என்ற நிறுவனம் மூலம் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில்
ஒரு மாவட்டத்திற்கு 2 அரசு பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுத்து தமிழக முழுவதும்
64 பள்ளிகளுக்கு, இச்செயல்திறன் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இம்மென்பொருள் படிப்படியாக
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு / நகராட்சி / ஊராட்சி பள்ளிகளில்
நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மென்பொருள் மூலம்
FORMATIVE ASSESSMENT மற்றும் SUMMATIVE ASSESSMENT மதிப்பெண்கள் பதிவு மற்றும் தர மதிப்பீடு பிரித்தல் போன்ற பணிகள் செய்ய உதவியாக இருக்கும். மேலும் மென்பொருள் முழுமையாக
அனைத்து பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஆசிரியர்களுக்கு முப்பருவ
முறையில் உள்ள CCE சார்பான எழுத்து பணிகள் பெரும் பங்கு குறையும் என்று
எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக