மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி
ஆசிரியர் கூட்டணி சிவகங்கை கிளை சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை அரண்மணை வாசல் முன் சனிக்கிழமை மாலை நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஏ.முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாஸ்கரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.வேதராஜசேகரன், பி.பால்துரை, சி.ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத் தலைவர் டி.ஜோசப்ரோஸ் சிறப்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.தாமஸ் அமலநாதன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் வி.சிங்கராயர் நன்றி கூறினார்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு வழங்குவதைப் போன்ற இணையான ஊதியம் வழங்க வேண்டும், தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தைத் தொடர வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வினைக் கைவிட்டு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனங்களை செய்திட வேண்டும்,
நாடு முழுவதும் கட்டணமில்லாத சிகிச்சையை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், மொத்த பணிக்கால அடிப்படையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு அளித்திடும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக