சிங்கம்புணரி:- 6வது ஊதியக்குழு குறைபாட்டை களைய அமைக்கப்பட்ட 3-நபர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு எவ்வித பலனும் இல்லை என்று கூறி அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிங்கம்புணரி வட்டாரக்கிளையின் சார்பாக உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பாக தன்னெழுச்சியாக 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னறிவிப்பின்றி நடந்த இந்த ஆர்ப்பாட்டாதத்தால் சிறிதுநேரம் பதற்றம் நிலவியது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத்தலைவர் அற்புதராஜ் தலைமை வகித்தார். வட்டாரச்செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் பால்துரை முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்டத்தலைவர் முத்துப்பாண்டியன் கோரிக்கை பேரூரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் அலுவலர் -ஆசிரியர் கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ், நிர்வாக குழு உறுப்பினர்கள் பாண்டியன், கௌசல்யா, கீதாராணி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வைரம், வட்டாரத்துணைச் செயலாளர் பாலா, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் வட்டார பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.
இது குறித்து மாவட்டத்தலைவர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: கடந்த ஆட்சியல் அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் தமிழகத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சமமான ஊதியம் இல்லை என உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி எமது இயக்கம் தனித்தும் மற்ற சங்கங்களுடன் இணைந்தும் பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. அதன் அடிப்படையில திரு.ராஜிவ்ரஞ்சன் தலைமயில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவும் எமது பிரச்சணைகளுக்கு தீர்வு காணவில்லை. தமிழகத்தின் தற்போதைய முதல்வர் அவர்கள் தனது தேர்தல் அறிக்கையில் ஊதியக்குழு குறைபாடுகளை களைவேன் என உறுதி அளித்தார். முதல்வரான பின்பு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. பின்னர் நீதிமன்ற ஆணையின் படி மூன்று நபர் குழு அமைக்கப்படது. அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இதுவரை வெளியான 28 அரசாணைகளில் கல்வித்துறைக்கு மூன்று அரசாணை வெளி வந்துள்ளது. இந்த அரசாணைகளால் இடைநிலை ஆசியர்களுக்கு எவ்வித பயனும் இல்லை; இதனால் மாநிலம் முழுமைக்கும் அதிக எண்ணிக்கையில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மிகவும் மனவேதனை இடைந்துள்ளனர். எனவே எங்கள் எதிர்பபை தமிழக அரசுக்கு பதிவு பண்ணும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டத்தை மாநிலம் முழுமைக்கும் எமது இயக்கம் நடத்துகிறது. இனிமேலாவது முதல்வர் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை களையவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக