6வது ஊதிய குழுவின் ஊதிய முரண்பாடுகளை
நீக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவும் அவ்வொரு நபர் குழுவின் குறைபாடுகளை
நீக்க அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவும் தங்களுக்கு எந்த பெரிய பலனை
தராததோடு, இன்று வரை தங்கள் ஊதிய நோக்கான 9300-34800+4200 என்ற ஊதிய
விகிதம் கனவாகவும், கானல் நீராகவுமே உள்ளது என்ற உணர்வு ஓங்கி அவர்களிடம்
வெறுமை உணர்வையும் மனத்தளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த
நோக்கை அடைய அனைத்து ஆசிரிய சங்கங்களும் முழுமூச்சாக போராட ஆயத்தமாவதும்,
போராட்டங்களை நடத்துவதும் தான் அவர்களுக்கு தற்போதைய அறுதல் உணர்வையும்
நம்பிக்கையும் தந்து அசுவாசப்படுத்துகிறது. ஆனால் இவ்வாறு ஊதிய விகிதத்தால்
பாதிக்கப்படும் ஆசிரியர்களே கூட அறியாமையாலோ அலட்சியத்தாலோ தாங்கள்
சார்ந்த ஆசிரிய சங்கம் நடத்தம் ஆர்பாட்டங்களிலோ, போராட்டங்களிலோ
பங்கேற்பதில்லை என்ற ஆசிரிய சங்கங்களின் வருத்தம் மிக உண்மையானது
நியாயமானது.
இந்த
அலட்சியத்தையும் அறியாமையையும் போக்கும் பொறுப்பு யாருக்கு உள்ளது ? என்ற
கேள்வி ஒவ்வொரு ஆசிரியர் மனங்களிலும் எழ வேண்டியது தற்காலத்தின் தற்சூழலின்
வெகு அவசியமும் அத்தியாவசியமும் ஆகும். விழிப்புணர்வு உள்ள ஒவ்வொருவரும்
பிறகுக்கு அறியாமையை போக்க வேண்டியதும் , உணர்வுகள் குறைந்துள்ள
உள்ளங்களில் தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தி அதை சீர் எழுச்சியடைய
வைப்பது ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
ஆசிரிய
சங்கங்களுக்கு தான் அனைத்து பொறுப்பும் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு,
ஒதுங்கு மனப்பான்மையால் அவ்வாசிரிய சங்கங்களை பழித்து பேசுவதும்
குறைக்கூரி பேசுவது என்பது அலட்சியம், அறியாமை மற்றும் உணர்ச்சிவய
மனப்பான்மையாகும். உண்மையில் உங்களைப்போல் ஆசிரிய சங்க
பொறுப்பாளர்களுக்கும் குடும்பம், வாழ்க்கை, அதன் பொறுப்புகள் உண்டு
என்பதையும், அச்சங்கங்களாலேயே நாம் தற்போது பெறும் சிறு பலன்களையும்
பெற்றுள்ளோம் என்பதை மறந்து நன்றியின்றி பேசுதல் பழித்தல் நியாயமா? என்பதை
உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.
நம்
மூத்தோர் நம்மை கைவிடார் என்ற நம்பிக்கை தற்சூழலுக்கு வெகு அவசியம்.
என்றுமே நம் ஆசிரிய மூத்தோர் நம்மை கைவிட்டதில்லை என்பதையும் அதற்கு கடந்த
கால வரலாறுகளை நினைவுப்படுத்திக் கொள்வதோடு அந்நம்பிக்கைகளை வலுவாக்குதல்
தான் அதற்கான செயலூக்கத்திற்கு வழிகோலும். அவநம்பிக்கை எனும் வேண்டா உணர்வு
வாழ்வின் இயற்கை நீதிக்கு முரணானதும் பலன் தராததும் என்ற தெளிவில் வலிவு
பெறுவோம்.
மேலும்
சிலர் ”புதிய கூட்டணி தொடங்கலாம், ’நமக்காக’ எதுவும் சரியில்லை”
என்கின்றனர். ஒவ்வொரு கூட்டணியும் திடீரென தோன்றிடவில்லை, அதன் பின் வலுவான
உழைப்பும், கொள்கையும் உண்டு என்பதை மறந்து செயல் கொள்வதும், எண்ணங்களை
விதைப்பதும் அறியாமையின் உணர்ச்சிவயத்தின் வெளிப்பாடே. இருப்பதைக்கொண்டு
சாதிக்க விழையாமல் தன்முனைப்பால் மேலும் மேலும் நம்மை நாமே
பிளவுப்படுத்திக்கொள்வது என்பது நம் பலத்திற்கும் ஒற்றுமைக்கும்
சீர்குலைவாய் இறங்குமுகமாய் அமையும். அதில் வெற்றிகள் கிட்டாது.
பிரச்சனைகள் தான் வளரும்.
ஆசிரியர்களின்
மன நோக்கை பிரதிபலிக்கும் கண்ணாடி தான் ஆசிரிய சங்கங்கள், நீங்கள்
அறிந்தவற்றை அறியாதவற்றையும் அதையும் தாண்டி ஆசிரிய நலம் சார்ந்து
சிந்திப்பவர்கள் தான் அதன் பொறுப்பாளர்கள். இந்த உண்மையை நம் அனுபத்தோடு
ஒப்பிட்டு நம்பிக்கை பெறுவது அவசியம். ஆசிரிய சங்கங்களின், அதன்
பொறுப்பாளர்களின் போராட்டம், தியாகம், இழப்புகளை மறந்து சோர்வு
பெறக்கூடாது.
இந்த
ஒட்டுமொத்த மனகுமுறலையும் ஆசிரிய சங்கங்கள் நன்கு அறிந்துள்ளனர். ஆசிரிய
சங்கங்கள் ஆசிரிய நலனிற்காக எதற்கும் துணியும், அந்த நாள் வெகு தொலைவில்
இல்லை என்பதும். ஒருங்கிணைந்த போராட்டத்தின் பலம் என்ன என்பதையும் அதன்
வெற்றிகளையும் முழுமையாக ஆசிரிய சங்கங்களை விட நன்கு வேறு யார் அறிவார்?
அதனால்
நம்பிக்கையும் பொறுமையும் காப்போம் உரிய நேரத்தில், உரிய காலத்தில், உரிய
அழைப்பு உங்களுக்கு வரும் என்ற நம்பிக்கையால் ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
வரும் அழைப்பிற்கு இணங்க அனைத்து ஆசிரியர்களையும் திரட்ட வல்ல திறனையும் ,
அதற்கான அடித்தளத்தையும் வளர்த்து வாருங்கள். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய
விகித எதிர்பார்பான 9300-34800+4200 பெறும் வரை இந்த ஊக்கம் இடைவிடாது தொடர
சூலுரைப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக