சென்னை: டி.இ.டி., தேர்வு தற்காலிக விடைகளை,
டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது. "தேர்வர்கள், விடைகள் குறித்த ஆட்சேபனைகளை,
செப்., 2ம் தேதிக்குள், கடிதம் வழியாக தெரிவிக்க வேண்டும்" என டி.ஆர்.பி.,
கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த,
17, 18 தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. இதை, ஏழு லட்சம் பேர்
எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும், "ஸ்கேன்" செய்யும் பணி முடிந்ததை
அடுத்து, டி.இ.டி., முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய, இரு
தேர்வுகளுக்குரிய தற்காலிக விடைகளை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது.
"தேர்வர்கள், விடைகள் குறித்த ஆட்சேபனைகளை,
செப்., 2ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள், கடிதம் வழியாக தெரிவிக்கலாம்.
ஆட்சேபனைக்குரிய விடை குறித்து தெரிவிப்பதுடன், சரியான விடைக்கான சான்றுகளை
இணைத்து, டி.ஆர்.பி.,க்கு தபால் அனுப்பலாம். டி.ஆர்.பி., அலுவலகத்தில்
வைக்கப்பட்டுள்ள பெட்டியிலும், கடிதங்களை சமர்ப்பிக்கலாம்" என, டி.ஆர்.பி.,
அறிவித்துள்ளது.
தேர்வர்கள் தெரிவிக்கும் ஆட்சேபனைகள்
குறித்து, பாட வாரியான நிபுணர் குழு, விரிவாக ஆய்வு செய்து, இறுதி முடிவை
அறிவிக்கும். இதன் அடிப்படையில், இறுதி விடைகள், மீண்டும், டி.ஆர்.பி.,
இணையதளத்தில் வெளியிடப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக