தனியார் பி.எட்., கல்லூரிகளில், ஒரு மாதமாக மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், 75 சதவீத கல்லூரிகளில், 10 இடங்கள் கூட நிரம்பாத அவல நிலை நிலவுகிறது.
தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில், மொத்தம், 2,118 இடங்கள் உள்ளன. அரசு கல்லூரிகளில் உள்ள, 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள, 90 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகளில் உள்ள, 55 சதவீத இடங்களும், ஒற்றை சாரள முறையில் மாணவர் சேர்க்கை நடத்தி அரசு நிரப்புகிறது. அதுபோல, தமிழகத்தில், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களை, அந்தந்த கல்லூரி நிர்வாகங்களே நிரப்பி கொள்கின்றன.

மாணவர் சேர்க்கை:
அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்குவதற்கு முன், தனியார் கல்லூரிகள், பி.எட்., மாணவர் சேர்க்கை நடத்தி இடங்களை நிரப்ப துவங்கின. குறைந்த மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்கள், தனியார் கல்லூரிகளை சேர துவங்கினர். ஒரு மாத கலந்தாய்வில், தமிழகத்தில், 450க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளில், 10 இடங்கள் கூட நிரம்பாத அவல நிலையே உள்ளது. முதுகலை பி.எட்., பட்ட படிப்பிலும், மொத்தமுள்ள, 35 இடங்களில், பல கல்லூரிகளில், 10 இடங்களுக்கே விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. அதிலும் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணத்தால், இந்த இடங்களில் சேர, மாணவர்கள் முன் வருவதில்லை. சில கல்லூரிகளில், ஒரு பி.எட்., இடம் கூட போதாத நிலையும் நிலவுகிறது.
கலந்தாய்வுக்கு பின்...:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள, பி.எட்., படிப்பிற்கான ஒற்றை சாரள முறையிலான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 30ம் தேதி துவங்கி, 5ம் தேதி வரை நடக்கிறது. மொத்தமுள்ள, 2,118 இடங்களுக்கு, 11,950 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இக்கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவர்களே, பெரும்பாலும் தனியார் கல்வியியல் கல்லூரிகளையே நாடுவர். எனவே, கலந்தாய்வுக்கு பின், தனியார் கல்லூரி இடங்கள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறியதாவது: அண்ணாமலை பல்கலைக் கழகம் உள்ளிட்ட, பல பல்கலைக் கழகங்களில் இன்னும் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் வெளிவரும் பட்சத்திலும், பி.எட்., படிப்பிற்கான ஒற்றை சாரள முறையிலான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்த பின்னும், தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரம்பும். கடந்தாண்டு துவக்கத்திலும், இதே நிலை நிலவியது. பின், தனியார் கல்லூரிகளில் உள்ள, 75 சதவீத இடங்கள் நிரம்பின. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக