தோழா! கலைக்கப்பட்டுள்ளதா உன் தூக்கம்? இல்லை தூங்குவது போல் பாசாங்கு செய்கிறாயா? ஒரு இனத்தின் தரத்தை தரமிடப்போகின்ற நேரத்தில் உனக்கு உறக்கமா? தரமில்லாமல் தாழ்ந்து போன உன் விடியலுக்காக ஆகஸ்ட் - 30 இயக்கம் நடத்தும் மாபெரும் மறியலில் இயக்கம் கடந்து சங்கமிப்போம் - சாதித்து காட்டுவோம். சாதிக்க துடிக்கும் இளைஞர் பட்டாளம் நிறைந்தது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோட்டை. போர் முரசு கொட்டி பகை விரட்டி, கோரிக்கைகள் வெற்றி பெற தோழனே உடனே புறப்படு. பகல் முழுதும் ஆசிரியர் சந்திப்பு, இரவு திட்டமிடல் எளிதான வெற்றியின் சூத்திரம். தர்மம் தன்னை சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும். தர்மம் வெல்ல புறப்படும் படை இது. யார் தடுத்தாலும் நிற்காது. ஆகத்து -25ல் குற்றால மாநில செயற்குழுவில் நமது பிரச்சனைகள் விரிவாக ஆலோசிக்கப்படும். போராட்ட களம் பல கண்ட நமக்கு சொல்லி தெரிவதில்லை. களத்தை சூடுபடுத்து. பாதிப்பை அறியாத பாவப்பட்ட ஆசிரிய இனத்தை தட்டி எழுப்பு. பிறர் எழுப்புவார் என்று இருந்து விடாதே1 மற்றவர்களை பற்றி கவலை கொள்ளாமல் உன் இயக்க பணியை மேற்கொள். இந்தியா சுதந்திரம் அடைந்த இந்த மாதமே நமக்கும் விடியல் ஏற்படடுட்டும். ஆகஸ்ட்-30 அணி அணியாய் திரள்வோம். ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவோம். ஒவ்வொரு ஊதியக்குழுவிலும் ஒப்பாரி வைத்தே நம் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளது. இப்பொழுதும் ஒப்பாரி வைப்போம். நமக்கு ஏற்பட்ட அநீதிகளை நாடறியும் வகையில் ஒப்பாரி வைப்போம். நமது ஒப்பாரி உரிமைக்கான ஒப்பாரி. தலைமை அறிவித்துள்ள போராட்ட வியூகங்களை முறையாக கடைப்பிடித்து உரிமையை மீட்போம். உரிமைக்கு உரத்த குரல் கொடுக்கவில்லையென்றால் நம்மை உதவாக்கரைகள் என்று வரலாறு பேசும். நாம் பிறக்கும் பொழுதே போராட்ட குணத்துடன் பிறந்தவர்கள். உதிக்கும்பொழுதே போராட்டத்தில குதித்த ஒரே இயக்கம். போராடுவதற்கும், போராட்டத்திற்கு அழைப்பதற்கும் தகுதியும், திராணியும் நம்மிடம் நிறையவே உண்டு. மனம் சோராமல் மடை திறந்த வெள்ளம் போல் மடமடவென மறியலில் குதிப்போம். மறியல் ஒன்றே நமது நிலயை மாற்றும். நம் நிலை உயரும் வரை போராட்டத்தை கைவிடோம் என சபதம ஏற்போம். நெஞ்சில் மூண்ட நெருப்பிற்கு சமரசம் ஏதுமில்லை என்ற பதாகையை உயர்த்தி பிடிப்போம். மஞ்சள் கொடியால் மாவட்டத்தை நிரப்புவோம். மறியலில் உன் போராட்ட வீச்சினை மற்றவர்களும் கடைப்பிடிக்கட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக