சென்னை: "வரும், 27 முதல், 29ம் தேதி வரை நடக்க இருந்த, குரூப்-1 மெயின் தேர்வு, அக்டோபர், 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடக்கும்" என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு: மேற்கண்ட தேதிகளில், வேறு போட்டித் தேர்வுகள் நடக்கின்றன. அந்த தேர்வுகளிலும், தேர்வர் பங்கேற்பதற்கு வசதியாக, குரூப் - 1 மெயின் தேர்வு, அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், குரூப்-8ன் கீழ், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் தேர்வு, வரும், அக்டோபர், 26ல் நடக்க இருந்தது. இத்தேர்வு, நவம்பர், 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ஷோபனா அறிவித்துள்ளார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், இந்திய வனத்துறை பணிக்கான தேர்வை, அடுத்த வாரத்தில் நடத்துகிறது. குரூப் -1 மெயின் தேர்வை எழுத உள்ள, 1,330 பேர், மத்திய அரசு தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர். இதன் காரணமாகவே, மெயின் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
டி.எஸ்.பி., துணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 25 பணியிடங்களை நிரப்ப, குரூப் - 1 மெயின் தேர்வு நடக்க உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக