பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/28/2013

அக். 3 : சர்வதேச போராட்ட தினம்

உலக தொழிற்சங்க சம்மேளனம் ஒவ்வோராண்டும் அக்டோபர் 3 ஆம் நாளை சர்வதேச போராட்ட தினமாக அனுசரிக்குமாறு உலகில் உள்ள உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் அறை கூவல் விடுத்திருக்கிறது
.கடந்த மூன்றாண்டு காலமாக உலகத் தொழிற்சங்க சம்மேளனம் சர்வதேச போராட்ட தினத்தைக் கொண்டாடி வருகிறது. 2009 ஏப்ரல் 1 அன்று சுரண்டலுக்கு எதி ராக தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் என்ற முழக்கத்துடன் இந்நாள் அனுசரிக்கப்பட்டது.2010இல் செப்டம்பர் 7 அன்று இந்நாள் அனுசரிக்கப்பட்டது. முதலாளித்துவ உலகம் ஆழமான நெருக்கடிக்குள்ளாகி சிக்கித் தவித் துக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘‘இந் நெருக்கடிக்கு நாம் உதவிட முடியாது’’ என்ற முழக்கம் அன்றைய தினம் முன்வைக்கப்பட்டது.

மிக வும் கடினமாகப் போராடி ஈட்டிய உரிமை களைப் பாதுகாத்திடுவோம் என்றும் முழக்க மிடப்பட்டது.இந்தியாவில், ஆட்சியாளர்களின் கொள் கை களை மாற்றக் கோரியும், உழைக்கும் மக்க ளின் அத்தியாவசியக் கோரிக்கைகளை முன்வைத்தும் நாடு தழுவிய அளவில் மத்தி யத் தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய சம் மேளனங்கள் இணைந்து நடத்திய நாடு தழு விய அளவிலான வேலை நிறுத்தமும் அனு சரிக்கப்பட்டதும், அதே நாளில் தற்செயலாக நடந்தது.உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் 16 ஆவது மாநாடு, 2011 ஏப்ரலில் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட் டின் போதுதான் உலகத் தொழிற்சங்க சம் மேளனத்தின் அமைப்பு தினமான அக்டோபர் 3 அன்று சர்வதேச போராட்ட தினம் அனு சரிக்குமாறு அறைகூவல் விடுக்கப்பட்டது. உலகத் தொழிற்சங்க சம்மேளனம் 1945 அக்டோபர் 3 - 8 தேதிகளில் பாரிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச தொழிற்சங்கங்களின் மாநாட்டில் அமைக்கப்பட்டது.

உலகத் தொழிற் சங்க சம்மேளனம் வரலாற்றின் பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கேற்ப வர்க்கரீதியாக அமைந்த சர்வதேச தொழிற்சங்கமாக இன்றளவும் தொடர்கிறது. 16ஆவது மாநாட்டின் அடிப்படையில், 2011 அக்டோபர் 3, அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு, கூட்டு பேர உரிமைகளை உத்தர வாதப்படுத்துதல், தொழிற்சங்க மற்றும் ஜன நாயக உரிமைகளை வழங்குதல், வாரத்தில் ஐந்து நாட்களுடன் 35 மணி நேர வேலை, சிறந்த ஊதியம் ஆகிய கோரிக்கை சாசனங் களுடன் அனுசரிக்கப்பட்டது.2012ஆம் ஆண்டு இந்நாள் உலகம் முழு வதும் உண்ண உணவு, குடிதண்ணீர், சுகா தாரம், கல்வி மற்றும் வீட்டுவசதி ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அனுசரிக்கப் பட்டது.உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைக் கவுன்சில் இக்கோரிக்கைகளை இறுதிப்படுத்துகையில், தொழிற்சங்கங்கள் மனிதகுலத்தின் இந்த அடிப்படைக் கோரிக் கைகளை எழுப்பிட வேண்டும் என்று குறிப் பிட்டது. உலகில் உள்ள பன்னாட்டு நிறுவனங் கள் பல நாடுகளிலும் உள்ள இயற்கைச் செல் வங்களை சூறையாடிச் செல்வதை அடுத்து இவ்வாறு கோரிக்கைகளை உலகத் தொழிற் சங்க சம்மேளனம் வடிவமைத்தது. இவ்வாறு உலகின் பல நாடுகளிலும் இயற் கைச் செல்வங்களைச் சூறையாடிச் செல்லும் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் விதத்தில் இக்கோரிக்கைகளின் மீதான பிரச்சாரங்கள் நடைபெற வேண்டும் என்றும் உலகத் தொழிற் சங்க சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது.2013இல் இயக்க தினம்உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைக் கவுன்சில் 2012ஆம் ஆண்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சமயத்தில், நாம் இந்த அடிப்படைக் கோரிக்கைகளின் மீதான பிரச்சாரத்தைத் தொடர வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறது.

மனிதகுலம் உயிர்வாழ்வதற்குத் தேவையான அனைத்து அடிப்படை உரிமைகளும் தற்போது மறுக்கப் பட்டிருக்கின்றன. எந்த விதத்திலாவது கொள் ளை லாபம் ஈட்ட வேண்டும் என்கிற சுரண் டும் கூட்டத்தினரின் வேட்கையானது, இயற் கை வளங்களை கொள்ளையடிப்பதற்கும், மக்களை இரக்கமின்றி சுரண்டுவதற்கும் இட்டுச் சென்றுள்ளது.எனவே, இந்த ஆண்டும் உணவு, தண் ணீர், சுகாதாரம், கல்வி மற்றும் வீட்டுவசதி முதலியவற்றிற்கான கோரிக்கைகளின் அடிப்படையில் நம் போராட்டங்கள் தொடரும். 85 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஊட்டச் சத்துக்குறைவால் பட்டினி கிடந்து வாடிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் பன் னாட்டு நிறுவனங்கள் உலகின் ஒட்டுமொத்த உணவுத் துறையையும் தங்கள் கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் கூட நம் வேளாண் துறையா னது கார்ப்பரேட்மயமாகிக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் அனைவருக்குமான பொது விநியோக முறை வேண்டுமென்கிற கோரிக் கையை ஏற்க மறுப்பதன் மூலமாக உணவுப் பாதுகாப்பு என்பதும் காலங்கடத்துவதற்கான பசப்பு வார்த்தையாக மாறிக் கொண்டிருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைவு, எடை குறை வாயிருக்கும் குழந்தைகள், ரத்தச்சோகை, மற்றும் பல்வேறு விதமான நோய்களுக்கு குழந் தைகள் ஆளாகியிருத்தல் ஆகிய அனைத்திற் கும் முறையான உணவு அவர்கள் உட்கொள் ளாததே காரணங்களாகும். உலகில் குழந்தை கள் அதிகம் உள்ள நாடு நம் நாடுதான். இதில் 40 விழுக்காட்டுக் குழந்தைகள் போதிய ஊட் டச்சத்தின்றி வாடி வதங்கிக் கொண்டிருக் கின்றன.நாட்டின் மக்கள்தொகையில் கணிசமான அளவிற்கு உணவு நெருக்கடியால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நாட்டின் வறுமை குறைந்துவிட்டதாக மிகவும் நகைக்கத்தக்க விதத்தில் ஆட்சியாளர்கள் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்த போதிலும் இதனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதி கரித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் தரமான, பாதுகாப்பான, மலிவான விலையில் உணவுகள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் மற்றும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று உலகத் தொழிற் சங்க சம்மேளனம் கோருகிறது. இந்தியாவில், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அரிசி/கோதுமை கிலோ கிராம் 2 ரூபாய் விலையில் மாதத்திற்கு 35 கிலோ கிராம் அனைவருக்கு மான பொது விநியோக முறை மூலமாக வழங் கப்பட வேண்டும் என்பதை நாம் கோரிக்கை யாக வைத்திருக்கிறோம்.தண்ணீர்மூன்றாம் உலகப் போருக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக தண்ணீர் தற்போது சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுத்த மான தண்ணீருக்கான உரிமை அடிப்படை உரிமையாகும். ஆயினும் நாட்டின் பெரும் பாலான பகுதிகளில் இது இன்றளவும் கன வாகவே நீடிக்கிறது.சர்வதேச அளவில், தண்ணீர் என்பது பன் னாட்டு நிறுவனங்களின் மிகப்பெரிய வர்த்தக மாக மாறியிருக்கிறது. உலகில் ஐந்து வயதுக் குக் குறைவாகவுள்ள 15 லட்சம் குழந்தைகள் போதிய அளவு பாதுகாப்பான குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாததன் காரணமாக இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. மக்களுக்கு நாள்தோறும் கிடைக்க வேண் டிய அடிப்படைத் தேவை தண்ணீர் என் பதையும், பாசனத்திற்கும் தண்ணீர் அவசியம் தேவை என்பதையும் ஆட்சியாளர்கள் அடி யோடு மறந்து விட்டு, மத்திய அரசு தன்னு டைய தண்ணீர்க் கொள்கையையும் அனைத்து நீர்வள ஆதாரங்களையும் தனியாரிடம் தாரை வார்க்கக் கூடிய விதத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.உலகத் தொழிற்சங்க சம்மேளனம், உல கில் உள்ள ஒவ்வொருவருக்கும் பாதுகாக்கப் பட்ட குடிநீர் வழங்கப்படுவது உத்தரவாத மாக்கப்பட வேண்டும் என்று கோருகிறது. கல்விஅனைவருக்கும் கல்வி என்பது உலகளா விய கோரிக்கையாகும். பல நாடுகளில் நவீன தாராளமயக் கொள்கைகள் ஆதிக்கம் செலுத் தக்கூடிய நிலையில், கல்வி என்பது மிகவும் லாபம் தரக்கூடிய தொழில்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. அரசாங்கம் கல்வி அளிக்க வேண்டும் என்பது அநேகமாக கைவிடப் பட்டு வருகிறது. கல்வித்துறையில் நெருக்கடி ஆழமாகிக் கொண்டிருப்பதை அடுத்து, இளைஞர்கள் கல்வி கற்பதற்கான தங்கள் அடிப்படை உரி மைகள் மறுக்கப்படுகிறார்கள். இந்தியாவின் கல்வி முறை அனைத்து அம்சங்களிலும் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. இது மாணவர்களின் கோரிக்கை மட்டுமல்ல. மத்திய அரசும் அடிப் படைக் கல்வியை ஓர் அடிப்படை உரிமை யாக்கி இருப்பதாகக் கூறிக்கொண்டிருக்கிறது.

ஆனால். முறையான உள்கட்டமைப்பு வசதி கள் இல்லாமல், போதிய அளவிற்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல், கல்வி அமைப்பு முறையும் கூட வர்க்க அடிப் படையில் பிளவுபட்டு நிற்கிறது. வசதி படைத்த ஒரு சிறிய அளவிலான கூட்டம் மட்டுமே பணத்தை வாரி இறைத்து தாங்கள் விரும்பும் கல்வியைப் பெறுவதை உத்தர வாதப்படுத்திக் கொண்டுள்ளது. அறிவியல் கண்ணோட்டத்தை வளர்த் தெடுப்பதை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் கல்வி முறை அமைந்திட வேண் டும். இதற்கு, முன்பு குறிப்பிட்டிருப்பதைப் போல, ஆரம்ப நிலையிலிருந்து உயர் நிலை வரை நாட்டின் கல்விக் கொள்கையில் முழு மையாக மாற்றம் செய்யப்பட்டாக வேண்டும். அனைவருக்கும் இலவசக் கல்வி என்கிற நம் பிரச்சாரம் தொடர வேண்டும்.சுகாதாரம்சுகாதாரம் அளிக்கப்படுவது என்பது வர்த் தகமல்ல என்று கூறப்பட்டாலும்கூட, இந்திய மற்றும் பன்னாட்டு வர்த்தகக் கார்ப்பரேட்டு களின் கைகளில் அது ஒரு வளம் கொழிக்கும் தொழிலாக மாறி இருக்கிறது. இன்றைய தினம் இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு என்பது பிரதானமாகத் தனியார் துறையிடம் சென்றுவிட்டது. பொதுவாக மக்கள் தங்கள் குறைந்த வருமானத்தில் மிகப் பெரிய தொகையை இதற்காகச் செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டிருக் கிறார்கள். சமூகப் பாதுகாப்பு என்பது தொழிற்சங்கங் களின் சாதனைகளில் முதன்மையான இடத்தை வகிக்கக்கூடியது. அது இன்றைய தினம் கைகழுவப்பட்டுக் கொண்டிருக் கிறது. உயிர்காக்கும் மருந்துகள் கூட பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற் குள் முழுமையாகச் சென்றுவிட்டன. இந்தியா வில் மேற்கொள்ளப்படும் மருந்து உற்பத்தி எதுவாக இருந்தாலும் அது பன்னாட்டு பகாசுர கம்பெனிகளால் விழுங்கப்பட்டு விடுகின்றன. அரசுத்தரப்பில் அடிக்கடித் தம்பட்டம் அடிக்கப்படும் மருந்து விலைக் கட்டுப்பாடு, சுகாதார மிஷன் போன்றவை அரசாங்கத் தரப்பில் கூறப்படுவதுபோல் எந்தப் பாதிப்பை யும் ஏற்படுத்திட வில்லை.சுகாதாரப் பாதுகாப்பு என்பது முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்திட வேண்டும் என்பது உலகத் தொழிற்சங்க சம்மேளனத் தின் கோரிக்கையாகும். அவ்வாறு செய்யப்படு வதன் மூலமாகத்தான் தொழிலாளர்கள் பணியில் இருக்கும்போதும் சரி, ஓய்வுபெற்ற பின்னரும் சரி ஒரு சுகாதாரமான வாழ்க்கைக் கான அனைத்து அம்சங்களையும் உத்தர வாதப்படுத்திட முடியும்.வீட்டுவசதி வீட்டுமனைகளின் விலைகள் விண் ணை நோக்கி சென்றுகொண்டிருக்கக்கூடிய நிலையில், நாட்டில் நகரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய சூழலில், வீட்டு வசதி என்பது நாட்டு மக்களை எதிர்நோக்கி இருக் கக்கூடிய மிக ஆழமான பிரச்சனையாக மாறி இருக்கிறது.

பாதுகாப்பான, வசிக்கத்தக்க மற் றும் மக்களால் வாங்கத்தக்க அளவிற்கான இல்லம் என்பதும் அவ்வாறு வாங்கப்படும் இல்லம் ஒருவர் அமைதியாகவும் கண்ணியத் துடனும் வாழ்வதற்கு உகந்ததாக அமையக் கூடிய விதத்திலும், எவராலும் வலுக்கட்டாய மாக வெளியேற்றப்பட முடியாத நிலையிலும் இருந்திட வேண்டும் என்பது உலகத் தொழிற் சங்க சம்மேளனத்தினால் முன்வைக்கப் பட்டுள்ள கோரிக்கையாகும். நாட்டு மக்களில் பெரும்பகுதியினர் மிக வும் மனிதாபிமானமற்ற நிலைமைகளில் குடி சைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெரும் பகுதியினர் வீடற்றவர்களாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் வீட்டுவசதிக்கான நம்முடைய பிரச்சாரமும் போராட்டமும் நம் முக்கியமான பணிகளில் ஒன்றாகும்.உலகத் தொழிற்சங்க சம்மேளனம் எழுப்பி யிருக்கின்ற இவ்வனைத்துக் கோரிக்கை களையும் முன்வைத்து, இதனுடன் இணைந் துள்ள 126 நாடுகளைச் சேர்ந்த 8 கோடியே 40 லட்சம் உறுப்பினர்கள் அக்டோபர் 3 அன்று உலகம் முழுதும் மிகப்பெரிய அளவில் கிளர்ச்சி நடவடிக்கைகளில் இறங்கிட இருக் கிறார்கள். இந்தியாவிலும், உலகத் தொழிற்சங்க சம்மேளனத்துடன் இணைந்துள்ள அத் துணை அமைப்புகளும் அன்றைய தினம் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திடவுள்ளார்கள்.இவ்வியக்கத்தில் நம் சங்கத்தின் சார் பிலும் மிகப் பெரிய அளவில் பங்கேற்போம். நம் முடைய அடிப்படைக் கோரிக்கைகளாகவும் விளங்கிடும் இக்கோரிக்கைகளுக்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். மக்களுக்கு ஒரு நாகரிகமான வாழ்க்கையை உத்தரவாதப் படுத்துவதற்கான போராட்டத்திற்காக அவர் களையும் அணிதிரட்டிடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக