மத்திய
அரசின் 7வது ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்
அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7வது மத்திய
ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் தனது ஒப்புதலை அளித்துள்ளார்.
இக்குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தனது பரிந்துரைகள் அளிக்க சராசரியாக 2
ஆண்டுகள் வழங்கப்படும். ஊதியக் குழு அறிவிக்கும் பரிந்துரைகள் 2016ஆம்
ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டு
வரப்படும்.
ஊதியக் குழுவின் தலைவர், உறுப்பினர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
6வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகள் 2006ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக