இரட்டைப்பட்டம் வழக்கு 18.9.2013 அன்று நீதிமன்றத்தில் வந்தது. அவ்வாறு வந்தபொழுது இரட்டைப்பட்டம் சார்பாக வாதிட்ட வழக்குரைஞர்களின் வாதம் நிறைவடைந்து விட்டதாக இணையதளங்களில் வரும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். வழக்கு வந்தது உண்மை ஆனால் வாதங்கள் நிறைவடையவில்லை என்பதுதான் உண்மை. நாளை 20.09.2013 அன்று ஒரு வேளை வழக்கு விசாரணை எல்கையைத் தொட்டால் இரண்டு தரப்பு வழக்கறிஞர்களின் சூடான விவாதம் கட்டாயம் உண்டு. மூத்த வழக்குறைஞர்கள் வாதிடும் இவ்வழக்கில் அவர்களது வாதம் முழுமையாக நிறைவடைந்த பின்பே நீதியரசர்கள் இராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் சத்தியநாரயணா தங்களது தீர்ப்பை அளிப்பார்கள். தொடர்ந்து நம் இணையதளத்துடன் ( www.mptnptf.blogspot.com )தொடர்பில் இருக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக