மதுரை,
செப்.3:மதுரை மாவட்டம் பேரையூர், கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில்
மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைச்சர் வைகைச்செல்வன் ஆய்வு நடத்தினார்.
.
மதுரை மாவட்டம் பேரையூர் காந்திஜி நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
பரதன் முத்துக்குமாரசாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டி.கல்லுப்பட்டி
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் இல.சுப்பிரமணியன் முன்னிலையில்
பள்ளிக் கல்வி, விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்
வைகைச்செல்வன் கல்வியின் தரம் குறித்து ஆய்வு நடத்தினார்.
அமைச்சர் ஆய்வின்போது தெரிவித்ததாவது:தமிழக முதல்வர், தமிழகம் கல்வியில்
சிறந்து விளங்கிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கல்வித்துறைக்கு ரூ.17
ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதன் அடிப்படையில்
இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளும் அனைத்து வசதிகளுடன்
மாணவர்கள் கல்வி பயில எண்ணற்ற பல வசதிகளை தமிழக அரசு செய்து வருகிறது.
கற்கும் பாரதத் திட்டம் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம்
வகிக்கிறது. அதுபோன்று இளமைக்கால கல்வி தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்
அளவுகோலாக உள்ளது. அனைவரும் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி கற்று இனிவரும்
காலங்களில் கல்வி கற்பது மிகமிக அவசியமாகும்.
கிராமப்புற மாணவ, மாணவிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி முன்னேறிட
வேண்டும். வரும் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மதுரை
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் 100% தேர்ச்சியை எய்திட
வேண்டும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஆய்வில் அமைச்சர் ஒவ் வொரு
வகுப்பறைக்கும் சென்று தனித்தனியாக மாணவ, மாணவிகளிடம் கணிதம், அறிவியல்
பாடங்கள் குறித்து கேட்டறிந்தார். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும்
முறையையும் பார்த்து அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக அமைச்சர் சிலமரத்துப்பட்டியில் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர்
நிதியிலிருந்து ரூ.2.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நாடக மேடையை
திறந்துவைத்தார்.
வகுப்பறை மற்றும் கழிப்பறைகளை சுத்தமாகவும்,
சுகாதாரமாகவும் வைத்திடவும் சிறந்த கல்வி வழங்கிடவும் ஆசிரியர்,
அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
உடன் திருமங்கலம் எம்எல்ஏ
முத்துராமலிங்கம், டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்
திருச்செல்வம், வேளாண் விற்பனைக்குழுத் தலைவர் ராமசாமி, டி.கல்லுப்பட்டி
பேரூராட்சித்தலைவர் மாணிக்கம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், மாவட்ட கல்வி
அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
மதுரை,
செப்.3:மதுரை மாவட்டம் பேரையூர், கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில்
மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைச்சர் வைகைச்செல்வன் ஆய்வு நடத்தினார்.
.
மதுரை மாவட்டம் பேரையூர் காந்திஜி நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பரதன் முத்துக்குமாரசாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் இல.சுப்பிரமணியன் முன்னிலையில் பள்ளிக் கல்வி, விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் வைகைச்செல்வன் கல்வியின் தரம் குறித்து ஆய்வு நடத்தினார்.
அமைச்சர் ஆய்வின்போது தெரிவித்ததாவது:தமிழக முதல்வர், தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கல்வித்துறைக்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதன் அடிப்படையில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளும் அனைத்து வசதிகளுடன் மாணவர்கள் கல்வி பயில எண்ணற்ற பல வசதிகளை தமிழக அரசு செய்து வருகிறது.
கற்கும் பாரதத் திட்டம் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது. அதுபோன்று இளமைக்கால கல்வி தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அளவுகோலாக உள்ளது. அனைவரும் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி கற்று இனிவரும்
காலங்களில் கல்வி கற்பது மிகமிக அவசியமாகும்.
கிராமப்புற மாணவ, மாணவிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி முன்னேறிட வேண்டும். வரும் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் 100% தேர்ச்சியை எய்திட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஆய்வில் அமைச்சர் ஒவ் வொரு வகுப்பறைக்கும் சென்று தனித்தனியாக மாணவ, மாணவிகளிடம் கணிதம், அறிவியல் பாடங்கள் குறித்து கேட்டறிந்தார். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையையும் பார்த்து அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக அமைச்சர் சிலமரத்துப்பட்டியில் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.2.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நாடக மேடையை திறந்துவைத்தார்.
வகுப்பறை மற்றும் கழிப்பறைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திடவும் சிறந்த கல்வி வழங்கிடவும் ஆசிரியர், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
உடன் திருமங்கலம் எம்எல்ஏ முத்துராமலிங்கம், டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திருச்செல்வம், வேளாண் விற்பனைக்குழுத் தலைவர் ராமசாமி, டி.கல்லுப்பட்டி பேரூராட்சித்தலைவர் மாணிக்கம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக