பள்ளிகளில்,
"டெங்கு' காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு
உள்ளது. மதுரை "விசாகா' பள்ளி மாணவி ஒருவர், "டெங்கு' பாதித்து பலியானதாக
எழுந்த புகாரை தொடர்ந்து, பள்ளிகளில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள,
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம்: பள்ளி வளாகத்தில்,
நீர்தேங்கும் பள்ளங்கள் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர்,
குடிநீர் தொட்டிகள் மூடியிருக்க வேண்டும். கழிவறைகளை சுத்தமாக வைக்க
வேண்டும். பயனற்ற கிணறு, குழிகளை மூட வேண்டும்.
திறந்த நிலையில்,
கழிவுநீர் கால்வாய்கள் இருப்பின், கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
கொசுக்கள் மூலம் "டெங்கு', சிக் குன்- குனியா, மலேரியா, நோய்கள் பரவுவது
குறித்து, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். உபயோகமற்ற பிளாஸ்டிக்
பொருட்கள், டயர்களை அப்புறப்படுத்த வேண்டும். கட்டட மேற்கூரையில் மழை நீர்
தேங்காமல் அகற்ற வேண்டும். பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள சிறு
பள்ளங்கள், பயன்படுத்தாத கிணறுகள் குறித்த விபரங்களை,
சுகாதாரத்துறையினருக்கு, தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள்
மூலம் பெற்றோருக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக