தமிழ்நாடு
குழந்தைகள் உரிமைகள் பாது காப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி
தஞ்சாவூர் பள்ளி ஒன்றில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.அதன் பிறகு நடந்த
பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:-
தஞ்சாவூர் மாவட்டம்
மருங்குளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு
பாலியல் வன்கொடுமை நடந்துள் ளது சம்பந்தமாக தொடர்புடைய பள்ளிக்கு சென்று
விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி, உடனிருந்த மாணவிகள்,
தாயார் மற்றும் உறவினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், கல்வித்துறை முதன்மை
அலுவலர், காவல்துறையினர் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. விசாரணையின்
முடிவில், நடந்த பாலியல் வன்கொடுமை உண்மைதான் என்று
கண்டறியப்பட்டது.பாதிக்கப்பட்ட சிறுமியின் மேல்படிப்புக்கும் எதிர்கால
திருமண வாழ்விற்கும் அரசின் உத விக்கு பரிந்துரைக்கப்பட உள்ளதாக தெரிவித்
தார். குற்றம் செய்துள்ள ஆசிரியர் மீது காவல் துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணி நீக்கம்
செய்யப்பட்டுள்ளார்.வேலியே பயிரை மேயும் நிலையில் ஆசிரி யர்கள் இச்செயலில்
ஈடுபடுவது கண்டிக்கத் தக்கது. இத்தகையவர்களுக்கு கடும் தண்ட னை வழங்கிட
அரசிற்கு பரிந்துரை செய்வோம் என்றார். அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி
வைக்க முதன்மை கல்வி அலுவலருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. புகார்
பெட்டியின் மூலம் பெறப்படும் புகார்களை முதன்மை கல்வி அலுவலர் மற்றும்
தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து குழந்தைகள் நலன் மற்றும் உரிமைகள்
பாதுகாக்கும் வகையில் தீர்வு காணப்படவேண்டும்.
மேலும் அனைத்துப்
பள்ளிகளிலும் இது சம்பந்தமாக வகுப்புகள் நடத்திட வேண்டும் என்றும்
தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 65 புகார்கள் பெறப்பட்டதில் இதுவரை 2
பேருக்கு நிவாரணம் பெற்றுத்தரப்பட்டுள்ளது. மேலும் ஐந்து பேருக்கு
நிவாரணத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் பேட்டியில் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக