கடலூர்: போலி பள்ளி சான்றிதழ்
கொடுத்து பத்தாம் வகுப்பு தேர்வை தனித்தேர்வர்கள் எழுத முயன்றது பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடியின் பின்னணியில் கும்பல் ஒன்று
செயல்பட்டு வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விருத்தாச்சலத்தில் உள்ள மாவட்ட கல்வித் துறை அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு தனித்தேர்வு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களை சரிபார்க்கும் போது, சிலர் கொடுத்துள்ள தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததை கல்வித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, போலீசில் புகார் செய்த கல்வித்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஒவ்வொரு பாடத்திற்கும் சில ஆயிரம் ரூபாய் கொடுத்தால், அந்தந்த பாடங்களில் தேர்ச்சி அடைய செய்துவிடுவதாக சிலர் உறுதியளித்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் சொல்லும் தேர்வு மையத்தில் தேர்வு எழுதினால், காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகள் மூலம் தேர்ச்சி பெற உதவி செய்வதாக, சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் டியூஷன் சென்டர் ஆசிரியர் கூறியதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.
இவர்களைப் போல சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருத்தாச்சலம் கல்வி மாவட்டத்தில் தனித்தேர்வுக்கு, போலி சான்றிதழ்களை உருவாக்கி விண்ணப்பித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக