பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/22/2013

இலவச திட்டங்களுக்கான செலவு கணக்கு நிதி வழங்காததால் ஆசிரியர்கள் அவதி

உத்தமபாளையம், : தமிழக அரசு வழங்கும் இலவச திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் செலவு கணக்கு நிதி முறையாக வந்து சேராததால் ஆரம்ப பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் திண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு அரசின் இலவச திட்டங்களான சீருடை, புத்தகம், நோட்டுகள், காலணிகள், ஜாமன்டரிபாக்ஸ், அட்லஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. முன்பெல்லாம் ஒரே நேரத்தில் புத்தகங்கள் வழங்கப்பட்டுவிடும். தற்போதோ மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இதனை எடுத்துச் சென்று பள்ளிகளில் பயி லும் மாணவர்களுக்கு சப்ளை செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 60க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் ஒவ்வொருமுறையும் இலவச திட்டத்தின் பொருட்கள் வரும்போது இதனை ஆசிரியர்களே எடுத்துச் செல்கின்றனர். கிராமங்களில் இருந்து ஆசிரியர்கள் தலைமையிட மான உத்தமபாளையத்திற்கு வந்து செல்லும் போது, பல்வேறு சிரமங்களை அடைகின்றனர். குறிப்பாக புத்தகம் உள்ளிட்ட பொ ருட்களை எடுத்துசெல்லும் போது வாகனங்களை அமர்த்த வேண்டியது உள்ளது.
பள்ளிகளுக்கு சென்று இறக்குவதற்கு கூலிஆட்களை நியமிக்கவேண்டியது உள்ளது. இதற்காக செலவு ரூ.200 முதல் 500 வரை ஆகிறது. இந்த செலவுகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கிட தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. குறிப் பாக தொடக்ககல்விஅலுவலகங்களில் இருந்து இதன் தொகை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்றடையவேண் டும். ஆனால் இவை முறையாக பிரித்து வழங்கப்படுவதில்லை என்ற புகார் உள்ளது.
இதனால் ஆசிரியர்களே சொந்தமாக பணத்தை செலவழிக்கும் நிலை இருந்து வருகிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் செலவு ஆவதால் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நேரடியாக சென்று செலவு பணத்தை கேட்பதற்கு ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் இலவச பொருட்கள் வரும்போது அதனை நேரடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று இறக்கிவிட்டால் இத்தகைய பிரச்சனைகள் எழாது.
இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘தமிழகஅரசு வழங்கக்கூடிய இலவச திட்டங்களுக்கான செலவு கணக்கு தொகை ஒவ்வொரு தொடக்ககல்வி அலுவலகங்களுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது. இதனை சில அலுவலர்கள் மட்டும் முறையாக பிரித்து தந்துவிடுகின்றனர். ஆனால் பல பள்ளிகளுக்கு இவை கிடைப்பதில்லை. இதனால் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டியது உள்ளது. எனவே நேரடியாக இலவசபொருட்கள் வந்தவுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கே சென்று இறக்கிவிட்டால் சிக்கல்கள் வராது’, என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக