சென்னை: சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும்
பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 1ம் தேதியில் இருந்து நடைபெறும் என
சி.பி.எஸ்.இ., நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடக ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வை 1.75 லட்சம் பேரும் பிளஸ் 2 தேர்வை, 80 ஆயிரம் பேரும் எழுதுவர் என சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டை விட 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 25 ஆயிரம் பேரும், பிளஸ் 2 தேர்வை 10 ஆயிரம் பேரும் கூடுதலாக எழுதுகின்றனர். தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக, அக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முதலில், 240 பள்ளிகள் இருந்ததாகவும், தற்போது, பள்ளிகளின் எண்ணிக்கை 300க்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாகவும் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சி.பி.எஸ்.இ., அறிவிப்பை தொடர்ந்து, தமிழக தேர்வு துறையும் பொது தேர்வு குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என்பதால் மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக