சென்னை: மருத்துவம் சார்ந்த டிப்ளோ, சான்றிதழ்
படிப்புகளில் சேர, இம்மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என
மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்து உள்ளது.
மருத்துவக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விழி ஒளி பரிசோதகர், செவிலிய உதவியாளர், மருத்துவப் பதிவேடு அறிவியல் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளில் சேர மாணவர்கள் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பப் படிவங்கள் 19 அரசு மருத்துவக்கல்லூரிகள், கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டிலும், இம்மாதம் 13ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஆவண நகல்களுடன், "செயலர், தேர்வுக்குழு, மருத்துவக்கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை 10" என்ற முகவரிக்கு இம்மாதம் 15ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
விண்ணப்ப படிவத்தின் விலை 200 ரூபாய். தாழ்த்தப்பட்டோர், அருந்ததியினர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு விண்ணப்ப படிவக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக