பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

11/06/2013

அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலத்தைத் திணிக்க வேண்டாம் -தமிழ் ஆர்வலர்கள் வேண்டுகோள்.

அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புக்களைத் தொடங்குவதால், இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்வழிக்கல்விக்குப் பெரும்
ஆபத்து வரும். ஆகவே, தனியார்பள்ளிகள் உட்பட அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் தமிழ்ப் பயிற்றுமொழிக்குஆவன செய்க” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.பாலகிருஷ்ணன் சட்டமன்றத்தில் பேசியதற்குக் கல்வி அமைச்சர் பழனியப்பன் தந்துள்ள தகவல்கள் சரியானதல்ல.“பொதுவாக ஒரு மனிதனுக்கு ஆங்கில மொழி ஒரு தொடர்பு மொழியாக உள்ளது” என்று உண்மைக்கு மாறாகப் பேசியுள்ளார். தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களுக்கு ஆங்கிலமா தொடர்பு மொழியாக உள்ளது? அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மட்டும்தான் ஆங்கிலம் தொடர்பு மொழியாக உள்ளது. சீனா, ஜப்பான், ருஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாட்டு மக்களின் தொடர்பு மொழியாக அந்தந்த நாட்டு மொழிகளே உள்ளன. நம் தலைவர்களோ, மக்களோ அந்த நாடு கட்குச்சென்றால் மொழி பெயர்ப்பாளர்களின் உதவியோடுதான் பேசுகின்றனர்.பொருளாதாரக் கள்கையாக இருந் தாலும், கல்விக் கொள்கையாக இருந்தாலும்,ஒரு மக்கள் நல அரசு என்றால் அது பெரும் பான்மை மக்களின் நலனைக் கருத்தில்கொண்டுதான் கொள்கைகளை வகுக்க வேண்டும். சில பெரும்முதலாளிகளின் நன்மை, தன்னலவாதிகளின் நன்மை என்று செயல்படுவது நல் அரசு ஆகாது. அவ்வகையில் கல்வியில் பயிற்று மொழி என்றால், அது தாய்மொழி வழிக்கல்விதான் பெரும்பான்மை மக்களுக்கு நன்மை பயக்கும். கல்வி நிபுணர்கள் தாய்மொழிப்பயிற்று மொழியாக இருந்தால்தான் பாடங்களை எளிதில், விரைவில் நன்கு கற்றுக் கொள்ள முடியும் என்ற கருத்தையே கூறுகின்றனர்.ராதாகிருஷ்ணன் கல்விக்குழுவிலிருந்து முத்துக்குமரன் கல்விக்குழு வரை அரசு அமைத்த அனைத்துக் கல்விக்குழுக்களும் தாய்மொழிப் பயிற்று மொழியையே பரிந்துரை செய்துள்ளன. ஆகவே, சில தன்னலத் தனியார் பள்ளிகள் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கின்றனர் என்பதற்காக அரசும் அத்தவறான வழியில் செல்லக்கூடாது. கல்வி உரிமைச் சட்டம் 2010ஆம் ஆண்டிலிருந்து அமலுக்கு வந்துவிட்டது என்கின் றனர். அக்கல்வி உரிமைச் சட்டப்படி அனை வருக்கும், தமிழில் 8வது வகுப்புரை இலவசக் கல்வி கொடுக்க ஏற்பாடு செய்யாமல், தனியார் ஆங்கிலப் பள்ளிகளைக் கொள்ளையடிக்க அனுமதித்துவிட்டு, அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குவது சரியான நடவடிக்கையா? கல்வி உரிமைச் சட்டத்தை அரசு செயல்படுத்துவதே சரியாக இருக்கும்.`ஆங்கிலமொழித்திறன் அவசியம்‘ என்கிறார் அமைச்சர். இன்றைய உலகமயச்சூழலில் ஆங்கிலமொழித்திறனும் அவசியம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், அதற்காக ஆங்கிலம் தொடக்கக் கல்வியிலிருந்தே பயிற்றுமொழியாக இருக்கவேண்டிய அவசியமில்லை.ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது வேறு; ஒரு மொழியின் மூலம் கற்றுக் கொள்வது வேறு என்பதைக் கல்வி அமைச்சர் புரிந்து கொள்ளட்டும். தாய்மொழி மூலம் கற்றால்ததான் சுயசிந்தனை பெருகும்; அறிவு வளரும். இக்கருத்தையே காந்தியடிகள், பாரதியார், தாகூர், பாரதிதாசன் போன்றோரும் கூறுகின்றனர். ஏன், கல்வி அமைச்சரின் வழிகாட்டி அறிஞர் அண்ணா அவர்களும் 28.11.1967 சட்டமன்றத்தில்.“என்னிடத்திலோ அல்லது நான் சார்ந் திருக்கிற அரசினிடத்திலோ, ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா என்றால் `ஆம்‘ என்று சொல்வோம். அந்தப் புலமை வரத்தக்க அள விற்கு வழிவகை செய்யப்போகிறீர்களா? என்றால் செய்யப்போகிறோம் என்று சொல் வோம். அந்தப் புலமையைப் பெறுவதற் காக ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருக்க வேண்டுமா என்றால், இருக்க வேண்டியதில்லை என்று சொல்லுகிறோம். ஏனெனில் பயிற்றுமொழியாக இல்லாமலேயே ஆங்கிலப்புலமை பெற முடியும். ஒரு மொழியில் புலமை வருவது அந்த மொழியின் மூலம் எல்லாப்பாடங்களையும் கற்பதால்தான் வரும் என்று எண்ணுவது பழைய நாளில் இருந்து வந்த ஒரு கருத்தாகும்“ என்றே பேசியுள்ளார்.ஆகவே, ஆங்கில வழிவகுப்புகளைத் திணிக்காமல், அண்ணாவழியில், அண்ணா பெயரைக் கொண்ட ஆட்சி, தமிழ்வழிக்கல்வி வளர ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக