தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்
இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) –ன் பொதுக்குழு கூட்டம்
20.11.2013 புதன் காலை 11.00 மணி அளவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாலர்
திரு.செ.முத்துசாமி அவர்கள் தலைமை யேற்றார். தமிழ்நாடு தொடக்க பள்ளி
ஆசிரியர் கூட்டணி,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்க பள்ளி
ஆசிரியர் மன்றம், தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்
கூடடணி, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்க
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஆகிய ஏழு அமைப்புகளின் சார்பில்
உயர் மட்டக் குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. டிட்டோஜேக் கூட்டமைப்பு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தை
04.12.2013 புதன் அன்று மாலை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்
கூட்டுவதெனவும்..,
2. மாவட்ட அமைப்பாளராகப் பொறுப்பெற்று கூட்டமைப்பை ஒருங்கிணைத்து
வழிநடத்திட சங்க வாரியாக கீழ்கண்ட மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு
1. ஆறாவது ஊதிய குழுவில் நடுவனரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள
ஊதியத்தை தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.01.2006 முதல் தமிழக
அரசும் வழங்கிட வேண்டும்.
2. பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை முற்றிலும் இரத்து செய்திட வேண்டும்.
3. ஆறாவது ஊதியக் குழுவில் தேர்வுநிலை, சிறப்பு நிலைக்கு தனியாக ஊதிய
விகிதமும், தர ஊதியமும், நிர்ணயம் செய்திட வேண்டும்.
4. (அ) FR 22 ன் படி பதவி உயர்வுக்கு 6% வழங்கிட வேண்டும்
(ஆ) FR 4(3) விதியை நடைமுறைப்படுத்திட வேண்டும்.
5. ஆசிரியர் தகுதித்தேர்வை (TET) உடனடியாக இரத்து செய்து
வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனங்களை
அமல்படுத்திட வேண்டும்.
6. இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி தொடக்க கல்வியில் தமிழ்வழி
கல்வி முறை தொடர்ந்திட வேண்டும்.
7 . அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர், வரலாறு பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, பதவி உயர்வின் மூலம்
நிரப்பிட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக