புதுடில்லி : 'பணியிலிருந்து ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள், உடனடியாக, அரசியல் கட்சிகளில் சேருவதை தடை செய்து, குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்க வேண்டும்' என்ற, தேர்தல் கமிஷனின் தொடர்ந்த வேண்டுகோளை, மத்திய அரசு நிராகரித்த வண்ணமாக உள்ளது.
பணிக்காலத்தில் செயல்பாடு:
அரசின் உயர்பதவிகளில் இருக்கும் அதிகாரிகள், பணியிலிருந்து ஓய்வுபெற்ற உடனேயே, தங்களுக்கு பிடித்தமான அரசியல் கட்சிகளில் சேர்ந்து, அக்கட்சிக்காக பாடுபடுகின்றனர். இதனால், அவர்களின் பணிக்காலத்தில், அவர்களின் செயல்பாடு எப்படி இருந்திருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.நம் நாட்டில், தேர்தல் பணிகள், அரசு அதிகாரிகளால் தான் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால், அத்தகைய அதிகாரிகளின் தேர்தல் பணி, எந்த அளவுக்கு, நடுநிலைமையுடன் இருந்திருக்கும் என்பதில் கேள்விக்குறி எழுந்தது.இதையடுத்து, இந்தப் பிரச்னையில் தலையிட்ட தேர்தல் கமிஷன், மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறைக்கு, கடந்த ஆண்டில், கடிதம் எழுதி, 'ஓய்வுபெறும் அதிகாரிகள், உடனடியாக அரசியல் கட்சிகளில் சேருவதை தடை செய்ய வேண்டும்' என கோரியது.அதை தவறாக புரிந்து கொண்ட மத்திய அரசு, 'அவ்வாறு தடை விதிக்கப்பட்டால், அது அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அமைந்து விடும்' என தெரிவித்ததுடன், 'தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உள்ளது' என்றது.
இதையடுத்து, தேர்தல் கமிஷன், மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதி, 'தேர்தலில் போட்டியிடுவது பற்றி நாங்கள் சொல்லவில்லை. தேர்தலில் போட்டியிடுவது அனைவரின் அடிப்படை உரிமை என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் சொல்வது, அரசு அதிகாரிகள் ஓய்வுபெற்ற உடன், அரசியல் கட்சிகளில் சேரக் கூடாது என்பது தான்' என, விளக்கமாக கடிதம் எழுதியது.
இதையடுத்து, தேர்தல் கமிஷன், மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதி, 'தேர்தலில் போட்டியிடுவது பற்றி நாங்கள் சொல்லவில்லை. தேர்தலில் போட்டியிடுவது அனைவரின் அடிப்படை உரிமை என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் சொல்வது, அரசு அதிகாரிகள் ஓய்வுபெற்ற உடன், அரசியல் கட்சிகளில் சேரக் கூடாது என்பது தான்' என, விளக்கமாக கடிதம் எழுதியது.
மீண்டும் கடிதம்:
அந்த கடிதத்தையும் ஏற்காத மத்திய அரசு, அதை நிராகரித்தது. எனினும், விடாப்பிடியாக, தேர்தல் கமிஷன், சமீபத்தில், மீண்டும், ஒரு கடிதத்தை எழுதி, 'அதிகாரிகளாக இருந்து பணி ஓய்வு பெற்றவர்கள், அரசியலில் சேர, குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளது.இந்த விவகாரத்தில், மத்திய அரசும், தேர்தல் கமிஷனும், விடாப்பிடியாக இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக