மாநில
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்பில் கற்பித்தலில்
புதிய அணுகுமுறைகள் குறித்து பயிற்சி அளிக்க திட்டமிட்டது. மாவட்ட
ஆசிரியர் பயிற்சி நிறவனங்களில் பணியாற்றும் முதுநிலை விரிவுரையாளர்களுக்கு
இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. வாய் மொழியாக படித்து கற்றல், செய்கைகள்,
பரிசோதனைகள் மூலம் கற்பித்தல், புதிய பாணியில் கற்பித்தல் உள்ளிட்ட
தலைப்புகளில் பயிற்சி இருக்கும். கடந்த அக்டோ பர், செப்டம்பர் மாதங்களில்
240 முதுநிலை விரிவுரையாளர்கள் பயிற்சி பெற்றனர்.
அடுத்த கட்டமாக டிசம்பர் 5 மற்றும் 6ம் தேதிகளில் சென்னையில் பயிற்சி
அளிக்கப்பட உள்ளது. இதில் மேலும் 120 பேர் பயிற்சி பெற உள்ளனர். இந்த
பயிற்சி பெறும் முதுநிலை விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்று
நிறுவனங்களில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பாடங்களுடன் இதையும்
கற்பிப்பார்கள். மேலும், அந்தந்த வட்டார வள மையங்களில் அடங்கிய பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக