பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

11/07/2013

அரசு பள்ளி மாணவர்களிடையே தினசரி நாளிதழ், புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை கல்வித்துறை தீவிரம்

மாணவர்களிடையே தினசரி நாளிதழ், புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் ஊர்ப்புற நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் என மொத்தம் 117 நூலகங்கள் உள்ளன. இவற்றில் 1.21 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நூலகங்களில் 20 லட்சத்து 66 ஆயிரத்து 587 நூல்கள் உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 16 லட்சத்து 41 ஆயிரத்து 879 வாசகர்கள் இந்த நூலகங்களை பயன்படுத்தி படித்து சென்றுள்ளனர். நடப்பாண்டில் 20 ஆயிரம் மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் மாணவ, மாணவிகளை புதிய உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1,750 புரவலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் இதர கட்ட நூலகங்களில் குடிமை பணிகளுக்கான பயிற்சி மையம் செயல்படுகிறது. இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. தினசரி 500க்கும் மேற்பட்ட வாசகர்கள் மாவட்ட மைய நூலகத்திற்கு வந்து படித்து செல்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க மாவட்ட நூலகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தினசரி நாளிதழ், புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த பள்ளிகளில் நூலகம் அமைக்க கல்விதுறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த வாரம் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய நூலகம் திறக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான நூல்கள் நூலகத்தில் வைக்கப்பட்டது. தினசரி நாளிதழ்கள், மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான பொதுஅறிவு புத்தகம், அப்துல்கலாம் புத்தகம், தலைவர்களின் வரலாறு புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் நாளிதழ், புத்தகம் படிக்க வேண்டும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதுபோல காரிமங்கலம் மாதிரி பள்ளியிலும் நூலகம் திறக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நூலகங்கள் மூலம் அறிவை வளர்த்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அனைத்து பள்ளிகளிலும், மாணவ, மாணவிகளுக்கு நூலகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நூலகம் தொடர்பான வாசகங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் 89 மேல்நிலைப் பள்ளி, 114 உயர்நிலைப் பள்ளிகளில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. நூலகம் இல்லாத பள்ளிகளில் நூலகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக