தொடர்ச்சியான மற்றும் விரிவான மதிப்பீட்டு
செயல்பாட்டை(Continuous and Comprehensive Evaluation - CCE),
ஆசிரியர்களுக்கும், பள்ளி முதல்வர்களுக்கும் மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக
இருக்கும் நிலையில், சி.பி.எஸ்.இ., அந்தப் பயிற்சியை மாணவர்களுக்கும்
அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்பணிக்காக தனியார் ஏஜென்சிகள் நாடப்பட்டுள்ளன. இந்த பயிற்சி செயல்பாட்டில், CCE -ன் பலவிதமான அம்சங்களில், 1 நாள் அல்லது 2 நாள் பயிற்சி பட்டறைகள், அந்த ஏஜென்சிகளால் நடத்தப்படும். இந்த பயிற்சி பட்டறைகளில் கலந்துகொள்வது மாணவர்களின் விருப்பம் சார்ந்தது. ஆனால், ஆசிரியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு, வாழ்க்கைத் திறன்கள், படித்தல் ப்ரோகிராம், புத்தாக்க மற்றும் தலைமைத்துவப் பண்புகள், தகவல்தொடர்பு வியூகங்கள், கேரியர் கவுன்சிலிங், மனநலம் மற்றும் வயதுக்கோளாறு தொடர்பான வழிகாட்டல்கள், படிப்பு தொடர்பான திறன்கள் மற்றும் கற்றல் வியூகங்கள், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சுயதிறன் கட்டமைப்பு திட்டங்கள், படைப்பாக்க எழுத்து, கதை சொல்லுதல், எழுதுதல் மற்றும் மொழி பெயர்த்தல், பேரிடர் மேலாண்மை, நிதி பற்றிய அறிவு உள்ளிட்ட பல விஷயங்களின்பால் இந்த CCE பயிற்சி திட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக