தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
ஞாபகசக்தி அதிகரிக்கவும், அரசு பொதுத் தேர்வில் சோர்வு இல்லாமல்
படிக்கவும், எதிர்காலத்தில் நல்ல ஆரோக்கியமாக இருக்க வாரத்திற்கு ஒருமுறை
இரும்பு சத்து மாத்திரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான மாத்திரைகள்
தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
தமிழக அரசு கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் உள்ளிட்ட 14 வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய சுகாதார இயக்கம் மூலம் மத்திய, மாநில அரசுகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் வைத்து வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று மாணவ, மாணவிகள் மதியம் சாப்பிட்ட பிறகு ஆசிரியர்கள் முன்னால் வீக்லி அயர்ன் ஹோலிக் ஆசிட் சப்ளிமென்ட்சேன் என்கிற இரும்பு சத்து மாத்திரை வழங்கப்படுகிறது.
இந்த மாத்திரை சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு ரத்த சோகை வராது. நல்ல புத்திசாலி மாணவர்களாக வருவார்கள். நல்ல பசி எடுக்கும் என்பதால் நன்றாக சாப்பிட்டு மாணவ, மாணவிகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், சோர்வு என்பது அறவே நீங்குவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்று டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அரசு பொதுத்தேர்வில் அதிக மார்க் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஞாபககச்தி மாணவ, மாணவிகளுக்கு அதிகரிக்கும் என்றும், மறதி என்பதே இருக்காது. அந்த அளவிற்கு இந்த இரும்பு சத்து மாத்திரை சூப்பர் பவராக மாணவ, மாணவிகளை ஆக்கிவிடும் என்றும் டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
வாரம், வாரம் மாணவ, மாணவிகளுக்கு மாத்திரை வழங்குவதற்காக அனைத்து மாவட்டத்திற்கும் மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை சா ர்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் எவ்வளவு மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள் என்பதை கண்டறிந்து பள்ளிகள் வாரியாக தேவைப்படும் மாத்திரைகளை அவர்கள் அனுப்பி வைப்பர்.
ஒரு பள்ளிக்கு ஆண்டுக்கு 52 வாரத்திற்குரிய மாத்திரை வழங்கப்பட்டு விடும். வாரம் தோறும் வியாழக்கிழமை ஆசிரியர்கள் முன்பாக மாணவ, மாணவிகள் கட்டாயம் அதனை சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி செல்ல விடுபட்டவர்களுக்கு சத்துணவு மையங்கள் மூலமாக அயன்சத்து மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் ரவிக்குமார் ஆலோசனையின் பேரில் சுமார் மூன்றரை லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இந்த இரும்பு சத்து மாத்திரை வழங்குவதற்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் உமா தலைமையில் சுகாதாரத்துறையினர் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை எப்படி சிறப்பாக செயல்படுத்தலாம் என்பது குறித்து தென் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை, சத்துணவுத் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் மதுரையில் ஆலோசனை கூட்டமும் நடந்துள்ளது.
இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் ஜெ.,இந்த திட்டத்தை சென்னையில் வைத்து துவக்கி வைத்த பிறகு மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அனேகமாக புத்தாண்டு பரிசாக பள்ளி மாணவ, மாணவிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த திட்டம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பள்ளிகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்துவதால் திட்டம் நல்ல முறையில் செயல்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சத்து மாத்திரைகளை இளம் பருவத்திலே மாணவிகள் சாப்பிடும் வாய்ப்பு கிடைப்பதால் அவர்கள் திருமணமாகி சென்ற பிறகு குழந்தை பேறுகால காலத்தில் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் ரத்தசோகை, ரத்த பற்றாக்குறையால் பிரசவ காலத்தில் சங்கடப்படுவது போன்ற சூழ்நிலை முழுமையாக இல்லாத நிலை ஏற்படும். இதன் மூலம் பெண்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு ஆரம்பத்திலே உறுதி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தவிர ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வகை பூச்சி மருந்து மாத்திரைகளும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் வைத்து வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கிருமிகள் ஏற்படாமல் கட்டுப்படுத்தப்படுவதுடன் அவர்களுக்கு நல்ல பசி ஏற்பட்டு நன்றாக சாப்பிடும் வாய்ப்பும், அஜீர கோளாறுகளும் ஏற்படாமல் இருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக