திருநெல்வேலி: தமிழகத்தில் பள்ளி தகவல் மேலாண்மை விபரங்களுடன் மாணவ, மாணவிகளின் போட்டோக்களை எடுத்து பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அரசு உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டப்பாட்டின் கீழ்
உள்ள அனைத்து வகை மேலாண்மையின் கீழ் செயல்படும் உயர்நிலை மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் போட்டோக்களை கல்வித் தகவல்
மேலாண்மை முறையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் சுய
விபரங்களுடன் ஒருங்கிணைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதில் அனைத்து உயர்நிலை மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு
வரை மாணவர்களுக்கும் போட்டோ எடுக்கப்பட்டுள்ளதா என்பது சம்பந்தப்பட்ட தலைமை
ஆசிரியர்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
போட்டோ எடுக்கப்படாத
மாணவர்களுக்கு பொருத்தமான வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றிபோட்டோ
எடுக்க சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
உயர் தர செல்போன் வசதி கொண்டு மாணவர்களை போட்டோ எடுப்பது, வெப் காமிரா வசதி
கொண்ட கம்ப்யூட்டர் மூலம் மாணவர்களை போட்டோ எடுப்பது, 20பேர் அல்லது
10பேர் கொண்ட அணியாக நல்ல தரமான போட்டா கருவி மூலம் தரமான போட்டோ எடுத்து
தனித்தனி போட்டேவாக மாணவர்களின் போட்டோக்களை பிரித்து எடுப்பது போன்ற
முறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக