கோரிக்கைகளை முன்னிறுத்தி இயக்கங்கள் தங்களுக்குள் தனிச்சங்க நடவடிக்கைகள் பல செய்து விட்டன. புதிய அரசு பதவியேற்று முதன் முதலாக கூடிய டிட்டோஜாக் அமைப்பால் இதுவரை எவ்வித போராட்டமும் நடத்தவில்லை. இந்த நிலையில் நாம் ஒன்றாக இணைந்துள்ளோம் என்பதையும், அரசின் கவனத்தை நம்மீது ஈர்க்கவும் குறைத்த பட்சம் மாவட்ட அளவில் ஒரு போராட்ட நடவடிக்கையிலாவது ஈடுபட வேண்டும் என்பதுதான் அடிப்படை போராட்ட வியூகம். அந்த முடிவைதான் டிட்டோஜாக் எடுத்துள்ளது. இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. எனவே சகோதர இயக்கமாகிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்ட நியாயத்தை புரிந்துகொண்டு மீண்டும் நம்முடன் இணையவேண்டும் என்பதே நம் அவா. நேரடியாக மாநில அளவில் என்பது அவ்வளவு சரியாக இருக்காது. அதற்கு அடுத்த கட்டம் என்ன என்பது கேள்விக்குறியாகி விடும. முடிந்தால் பிப்ரவரி -2 என்பதை ஒருவார காலம் முன்னதாக வைக்க டிட்டோஜாக் யோசிக்கலாம். எனவே டிட்டோஜாக் எடுத்த முடிவு சரியே. இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதர பிரச்சணையில் ஒரு வரலாற்று பிழை ஏற்படாதவாறு அனைத்து இயக்கங்களும் ஒருங்கினைந்து செயலாற்ற வேண்டும்.
தோழமையுடன்..........
முத்துப்பாண்டியன்.A
மாவட்டத்தலைவர்@TNPTF
சிவகங்கை
தோழமையுடன்..........
முத்துப்பாண்டியன்.A
மாவட்டத்தலைவர்@TNPTF
சிவகங்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக