பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

12/02/2013

பொறுமை இழக்கும் மாணவர் சமுதாயம்: சாப்பாடு தாமதமானதால் மாணவர் கொலை

கருணை இல்லத்தில் சாப்பாடு தாமதமானதால் சிறுவனை விறகுக் கட்டையால் அடித்து கொலை செய்து எரிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் இருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம், சத்தியஜோதி கருணை இல்லத்தில் ஏழை மற்றும் ஆதரவற்ற 35 பேர் தங்கியிருந்தனர். இவர்கள், காஞ்சிபுரம் நகரில் பள்ளி, கல்லூரிகளில் படித்து வந்தனர். காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியைச் சேர்ந்த சுசிலா என்பவர் மகன் முருகன், 10, இங்கு தங்கி ஏகாம்பரநாதர் நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 29ம் தேதி இரவு 8:00 மணிக்கு சிறுவன் மர்மமாக இறந்தான். மண்ணெண்ணெய் ஊற்றி அவரது உடலை எரிகக முயற்சி நடந்தது.
இதை அடுத்து இப்பகுதிவாசிகள் கருணை இல்லத்தில் புகுந்து இல்லக்காப்பாளர் கார்மேகனை சரமாரியாக தாக்கினர். பலத்த காயமடைந்த அவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. சமூக நலம், குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய பிரிவு அதிகாரிகளும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
கல்லூரி மாணவர்கள்
இந்த இல்லத்தில் 17 வயது சிறுவர்கள் 2 பேர் தங்கியிருந்தனர். இவர்கள் காஞ்சி சங்கரா கல்லூரியில் படித்து வந்தனர். சிறுவன் மரணத்தை தொடர்ந்து இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இருவரையும் போலீசார் நேற்று கண்டுபிடித்து விசாரித்தனர்.
அவர்கள், போலீசாரிடம் கூறியுள்ளதாவது: கருணை இல்லத்தில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறோம். எங்கள் சொல்படித் தான் காப்பாளர் கார்மேகனும், சக சிறுவர்களும் நடக்க வேண்டும். முருகன் தினமும் சமையல் பணியில் ஈடுபடுவான். இரவு 7:30 மணிக்கு சாப்பாடு தயாராக இருக்க வேண்டும் என, கூறி வந்தோம். ஆனால் சாப்பாடு 8:30 மணிக்குத் தான் தயாராகும்.
கடந்த 29ம் தேதி இரவு 8:00 மணிக்கு சாப்பாடு அடுப்பில் வெந்துக்கொண்டிருந்தது. ஏன் தாமதம் என முருகனை கேட்டோம். அவன் பதில் சொல்லவில்லை. எங்களுக்கு ஆத்திரம் வந்ததால் முருகனை விறகு கட்டையால் தாக்கினோம். மயங்கி விழுந்த அவன் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தான். உடலை மொட்ட மாடிக்கு தூக்கி சென்று படுக்க வைத்தோம். அவன் இறந்து விட்டதை உறுதி செய்தோம். இதை காப்பாளர் கார்மேகனும் பார்த்துக் கொண்டிருந்தார்.
சமையல் அறையில் இருந்து வாட்டர் கேனில் மண்ணெண்ணெய் எடுத்து வந்து உடல் மீது ஊற்றி தீ பற்ற வைத்தோம். உடல் கொஞ்சம் தான் எரிந்தது. மீண்டும் பெரிய கேனில் மண்ணெண்ணெய் கொண்டு வந்து உடலில் ஊற்றி எரித்தோம். ஓரளவுக்கு உடல் கருகியது. அதை மாடிப்படிக்கெட்டில் வைத்துவிட்டு இறங்கினோம். அதைத் தொடர்ந்து மாடிக்கு கார்மேகன் சென்றார். அடுத்த நிமிடமே, நாங்கள் இல்லத்தை விட்டு வெளியேறி விட்டோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக