1964 செப்டம்பர் 24ல் அன்றைய கோவை மாவட்டத்தில் (இன்று திருப்பூர் மாவட்டம்) ஊத்துகுளி ஒன்றியத்தில் கஸ்தூரிபாளையம் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து 31.5.2002 ல் பணிநிறைவு. 37 ஆண்டுகள் ஆசிரியப்பணி.
1964ல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் இணைந்து 1977ல் ஊத்துக்குளி வட்டாரச் செயலாளர் பொறுப்பு. 1979ல் கோவை மாவட்டப் பொருளாளர் பொறுப்பு. 1980ல் ஈரோடு மாவட்டம் துவங்கியபோது மாவட்ட அமைப்பாளர். பின் மாவட்டச்செயலாளர்.1984ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. மாவட்டச் செயலாளர் மற்றும் மாநில இணைச் செயலாளர் பொறுப்பு.1990ல் மாநிலப் பொதுச்செயலாளரகத் தேர்வு. 1998ல் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியச் செயலாளர் பொறுப்பு.
தமிழ்நாட்டில் ஜேக்டீ, ஜேக்டீ-அரசு ஊழியர் இயக்கங்களின் பேரமைப்பு, ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் டிட்டோஜேக் உருவாக்கத்தில் முக்கியப்பங்கு. மத்திய அரசுஊதியம் வேண்டி மறியல்-.கோவை சிறை. 1.6.1988 முதல் மத்தியரசு ஊதியம். வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனம், பாதிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி மாணவர் நிவாரணம்,
ஆரம்பக்கல்விக்குத் தனி இயக்குனரகம், நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உதவித்தொடக்க்கல்வி அலுவலர் நிர்வாகப்பொறுப்பு, மத்திய 5ஆம் ஊதியக்குழுவில் சட்டோபாத்யாயா பரிந்துரை ஓரளவு நடைமுறைப் படுத்தியது – ஆகியவை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் குறிப்பிடத் தக்க வெற்றிகளாகும். ‘ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி’ இதழ் ஆசிரியராக 1990 முதல் 2002 முடிய பலகல்விக் கொள்கைகளையும், சட்டோபத்யாயா குழு முதலான ஊதியக்குழுக்களின் அறிக்கைகளையும் தமிழில்தந்த முதல் அமைப்பு என இயக்கம் பெருமைபெற்றது.
பணி ஓய்வுக்குபின் சமுதாயப்பணி- திருப்பூரில் டெக்பா அமைப்பில் நிர்வாகச் செயலாளர் மற்றும் ‘டெக்பா செய்தி” மாதஇதழின் ஆசிரியர்.
2010ல் ஊத்துக்குளியில் ‘மக்கள் மருத்துவமனை உருவாக்குவதில் பங்கு.
திருப்பூரில் உள்ள ‘காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண முயற்சி. இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த சீனாவின் வெற்றிகரமான அக்குபஞ்சர் அனுபவங்களைத் தமிழில் மொழிபெயர்த்து நூல் வெளியீடு.
"தோழாரின் இந்த இடைவிடாத பயணத்தில் ஆசிரியர் பணிக்கு வந்து சில ஆண்டுகளே ஆன எங்களுடைய முகஙூல் கிறுக்கள்களையும் படித்து ஊக்கிவிப்பதை பார்த்து வியப்பில் உள்ள நாங்கள் தோழரை வாழ்த்த வயதில்லை ஆனால் தோழரின் வழிகாட்டுதலில் என்றும் இச்சமூகத்திற்கு பணிசெய்வோம் என உறிதி அளிக்கிறோம். வாழ்க 100 ஆண்டுக்கு மேல் உம் பணி மற்றும் உம் வரலாறு வாழும் பல 100 ஆண்டுகள்..."
ம.மனோகுமார் TNPTF
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக