சிவகங்கை, : ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு கோரி சிவகங்கையில் பிப். 28ல்
ஆசிரியர் உரிமை இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது.
சிவகங்கையில் மாவட்ட ஆசிரியர் உரிமை இயக்க கூட்டம் நடந்தது. முதன்மை ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலைமை வகித்தார். இதில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஏறகனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2004-06ல் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு நியமன நாள் முதல் பணிவரன்முறை செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் மீதான தொடர் தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு விதிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி பிப்.28ல் சிவகங்கையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக