கடந்த 20.2.2014 அன்று மாநிலத் தலைவர் திரு.கண்ணன், மாநிலப் பொருளாளர் திரு. மோசஸ் அவர்களுடன் சிவகங்கை மாவட்டத்தலைவர் திரு.முத்துப்பாண்டியன் ஆகியோர் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலவலர் மற்றும் மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலவலர் திருமதி. சீ.நாகலெட்சுமி ஆகியோரின் ஆசிரியர் விரோதபோக்கை தடுத்து நிறுத்தாமல் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் வேடிக்கை பார்ப்பதாக எடுத்துரைத்தனர். அதன் எதிரொலியாக உடனடியாக சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலவலராக மாற்றப்பட்டார். கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலரின் அடாவடிகள் குறித்த விசாரனை மேறகொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்தியிருந்தோம். அதன் விளைவாக மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் இன்று (24.2.2014) மாலை கல்லல் AEEO திரு. ஜோசப் அடைக்கலராஜா அவர்களை கண்ணங்குடி உதவித் தொடக்கக்கல்வி அலவலராக மாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலுவலரின் மீது தகுந்த விசாரனை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். விதிக்கு புறம்பாக செயல்படும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வரும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு இயக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கல்லல் AEEOஆக தேவகோட்டை கல்வி மாவட்டம் அறிவியல் AEEO திரு. கென்னடி மாற்றம் செய்யப்பட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக