சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் கல்லல் ஒன்றியங்களில் பணிபுரியும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களின் தொடர் ஆசிரியர் விரோத போக்கையும், உண்மைக்கு புறம்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதையும் கண்டித்து மேற்கண்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பல முறை நேரடியாக மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரை சந்திந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் DEEO மேற்கண்ட அலுவலர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வாந்தார். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரின் நடவடிக்கையால்அதிருப்தியடைந்த TNPTF நேற்று(20.2.2014) மாநிலத்தலைவர் திரு.கண்ணன், மாநிலப் பொருளாளர் திரு.மோசஸ் மற்றும் சிவகங்கை மாவட்டத் தலைவர் திரு. முத்துப்பாண்டியன் ஆகியோர் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் இளங்கோவன் அவர்களை சந்திந்து கோரிக்கை மனு அளித்து மாவட்டச் சூழலை விளக்கினர். இதையடுத்து நேற்று பிற்பகல் சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலராக இடம் மாற்றப்பட்டார். சிவகங்கை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராக உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் திரு. இரவிக்குமார் நியமிக்கப்பட்டார். இச்சூழலில் மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலுவலரை கண்டித்து வருகிற 28.02.2014 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் மானமதுரையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக