27.2.2014 அன்று மாலை 3.00 மணிக்கு சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளை மானாமதுரை பிரச்சனை குறித்தும், கண்டன ஆர்ப்பாட்டம் கோரிக்கைகள் குறித்தும் நேரடி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்து இருந்தார். DEEO அவர்கள் மாவட்டத்தின் புதிதாக பணியேற்றதால் TNPTF நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து பேச்சு வார்த்தையை தொடங்கினர். DEEO முன்னிலையில் நடைபெற்ற இப்பேச்சு வார்த்தையில் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்வதாகவும், முதல் கோரிக்கையை விரைந்து முடிப்பதாகவும் உடன்பாடு செய்யப்பட்டது. கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற மானாமதுரை உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் ஒத்துக்கொண்டதால் இன்று நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மானாமதுரை வட்டாரத்தில் கல்விச் சூழல் சுமூகமாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருவதாக AEEO உறுதியளித்துள்ளார். TNPTF நிர்வாகிகளும் ஆசிரியர் பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டால் ஒன்றிய நிர்வாகம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பதாக உறுதியளித்தனர்.
இரண்டு மணி நேரத்திற்கு மேலான இச்சநதிப்பில் சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் மானாமதுரை AEEO திருமதி.நாகலெட்சுமி இவர்களுடன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத்தலைவர் திரு.ஜோசப் ரோஸ், மாவட்டத்தலைவர் திரு.முத்துப்பாண்டியன், மாவட்டச் செயலாளர் திரு.தாமஸ் அமலநாதன், மாவட்டப் பொருளாளர் திரு.சிங்கராயர், மானாமதுரை வட்டாரச்செயலாளர் திரு.தங்க மாரியப்பன், தலைவர் திரு.இரமேஷ் குமார், பொருளாளர் திரு. இரவிக்குமார், மற்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக