இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி ஆனதால் வழக்கை உச்ச நீதி மன்றம் கொண்டு செல்ல வழக்கின் ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த 18.2.2014 அன்று சென்னையில் வழக்குரைஞரை சந்தித்தனர். இச்சந்திப்பிற்கு பின் நம்மை தொடர்பு கொண்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்வதில் உறுதியாக உள்ளதாகவும், அடுத்த வாரம் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வழக்குரைஞருடன் புதுதில்லி செல்லவிருப்பதாகவும் அப்பொழுது சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் நம்மிடம் தெரிவித்தனர்.
தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களும் இணைப்பு:
இந்த வழக்கில் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இரட்டைப்பட்டம் பெற்றவர்கள் 10 பேர் இணைந்துள்ளனர். இவர்கள் தாங்கள் பணி நியமனம் பெறும்பொழுது இடைக்கால தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள். இவ்வழக்கு இவர்களுக்கு வாழ்வாதார பிரச்சனை என்பதால் மிகவும் ஆர்வமுடன் இதில் பங்கெடுத்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக