அரசு துறையில் நேர்முகத் தேர்வு அல்லாத 2,269 பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு, லோக்சபா தேர்தல் காரணமாக மே மாதம் 18ம் தேதிக்கு பதிலாக, ஜூன் 29ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வுக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மே மாதம், 16ல் நடப்பதை கருத்தில் கொண்டு குரூப்-2 தேர்வை ஜூன், 29ம் தேதிக்கு தள்ளிவைத்து டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, நேற்று அறிவித்தார்.
ஜூன் 29 காலை 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை இந்த தேர்வு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக