ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது.
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி மதிப்பெண் அளவை, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து கடந்த மாதம் முதல்வர் அறிவித்தார். இந்த சலுகை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த டி.இ.டி., தேர்வுக்கு பொருந்தும் எனவும் தெரிவித்தார்.
அதன்படி, டி.இ.டி., முதல் தாளில் (இடைநிலை ஆசிரியர்), தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கு, கடந்த, 12ம் தேதி முதல், ஐந்து மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. இந்தப் பணி 31ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, டி.இ.டி., இரண்டாம் தாளில் (பட்டதாரி ஆசிரியர்) தேர்ச்சி பெற்ற 27 ஆயிரம் பேருக்கு ஏப்., 7 முதல், 25ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) முடிவு செய்துள்ளது.
முதல் தாளுக்கு நடந்ததைப் போல் 5 மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும் என டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்துள்ளது.
====
அறிவியல் உபகரணங்கள் வாங்க தலைமை ஆசிரியர்கள் மறுப்பு
====
அறிவியல் உபகரணங்கள் வாங்க தலைமை ஆசிரியர்கள் மறுப்பு
காரைக்குடி: அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் கடந்த 2011ம் ஆண்டு முதல் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த அறிவியல் உபகரணங்கள் வாங்க, ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு வெளிமாவட்டங்களை சேர்ந்த தனியார் கம்பெனி மூலம் கருவிகள் வழங்கப்பட்டன. இதற்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தலைமை ஆசிரியர்களே உபகரணங்களை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கல்வியாண்டில் தனியார் கம்பெனி மூலம், அறிவியல் கருவிகள் அரசு உயர்நிலை பள்ளிகளில் இறக்கி வைக்கப்பட்டு தலைமை ஆசிரியர்களிடம் கையெழுத்து பெறும் பணி துவங்கியுள்ளது. இதற்கு தலைமை ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "தனியார் மூலம் வழங்கும், அறிவியல் உபகரணங்கள் தரமற்று விலை அதிகமாக உள்ளது. மேலும் பள்ளிகளின் தேவை அறிந்து, இவர்கள் வழங்குவதில்லை.
கடந்த ஆண்டு வாங்கிய உபகரணங்களையே மீண்டும் வழங்குகின்றனர். எனவே பழைய முறையிலேயே, அறிவியல் உபகரணங்களை வாங்க, வழிவகை செய்ய வேண்டும். அல்லது இதற்கு தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக