நாட்டின் 17 மாநிலங்களில் சேர்த்து, மொத்தமாக
24 மத்தியப் பல்கலைகள் திறக்கப்படவுள்ளன. பொருளாதார விவகாரங்களுக்கான
கேபினட் கமிட்டி, புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறப்பதற்கான
ஒப்புதலை வழங்கியது.
மொத்தம் 17 மாநிலங்களின் 53 மாவட்டங்களில் 54
புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இப்பள்ளிகளைத்
திறப்பதற்கு மொத்த மதிப்பீடாக ரூ.920 கோடி திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டுமானம், உபகரணங்கள் மற்றும் அறைகலன்கள்
ஆகியவற்றுக்கான செலவு ரூ.790 கோடியாகவும், ஊதியம், உதவித்தொகை மற்றும் இதர
செலவுகளுக்கான தொகை ரூ.130 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்
முழுஅளவில் செயல்பட துவங்கும்போது, அதன்மூலம் ஏறக்குறைய 54,000 மாணவர்கள்
பயன் பெறுவார்கள். தற்போது நாட்டில் இயங்கிவரும் கேந்திரிய வித்யாலயா
பள்ளிகளில் மொத்தம் 12 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
தற்போதைய நிலையில், 1094 கேந்திரிய வித்யாலயா
பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில், மாஸ்கோ, காத்மண்டு மற்றும் டெஹ்ரான்
ஆகிய இடங்களில் இயங்கும் பள்ளிகளும் அடக்கம்.
அடிக்கடி பணிமாறுதலுக்கு உட்படும் அரசு
ஊழியர்கள், குறிப்பாக, பாதுகாப்புத் துறைகளில் பணியாற்றும் நபரகளின்
குழந்தைகள் தடையில்லாத சிறந்த கல்வியைப் பெறுவதை கேந்திரிய வித்யாலயா
பள்ளிகள் உறுதி செய்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக