மதுரை: மூத்த குடிமக்களை பாதுகாக்க பள்ளி,
கல்லூரிகளில் தாத்தா, பாட்டிகளை பற்றிய பாடத்திட்டம் இடம் பெற, அரசு
பரிசீலிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை
வழக்கறிஞர், ராம்பிரபு, "மூத்த குடிமக்களுக்கு, மதுரை அரசு
மருத்துவமனையில், தனி வார்டு, வரிசை ஏற்படுத்த வேண்டும். முதியோர்
இல்லங்களை கண்காணிக்க, குழு அமைக்க வேண்டும். பெற்றோர் மற்றும் மூத்த
குடிமக்கள் பராமரிப்பு சட்டம், விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்" என
மனு தாக்கல் செய்தார்.
இதன்படி, வழக்கறிஞர் கமிஷனர்கள் குழு
அமைக்கப்பட்டது. குழு உறுப்பினர்களான, பொன்னையா, பிரபு ராஜதுரை, லஜபதிராய்
ஆகியோர் கோர்ட்டில் சமர்ப்பித்த அறிக்கையில், "மதுரை மாவட்டத்தில்,
முதன்முறையாக, மூன்று ஏக்கரில், மருத்துவ வசதியுடன், அரசு முதியோர் இல்லம்
அமைத்தல்; பள்ளி, கல்லூரிகளில் மூத்த குடிமக்கள் பற்றி, பாடத் திட்டத்தில்
இடம் பெறச் செய்தல்; திட்ட அறிக்கை தாக்கல் செய்யும் மாணவர்களுக்கு,
மதிப்பெண் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது" என கூறப்பட்டு உள்ளது. நீதிபதிகள்
ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி கொண்ட, பெஞ்ச் முன் மனு விசாரணைக்கு வந்தது.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு
சட்ட தீர்ப்பாயம் மூலம், 95 மனுக்கள் பைசல் செய்யப்பட்டுள்ளன. மதுரை
மாவட்டத்தில் 72,870 பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது. சமூக
நலத்துறை, தொண்டு நிறுவனங்கள் மூலம், 32 மாவட்டங்களிலும் உள்ள சிறப்பு
இல்லங்கள் வாயிலாக, மூத்த குடிமக்கள், ஆதரவற்ற குழந்தைகள் 1,600 பேர்
பயனடைகின்றனர்.
மதுரையில் மூன்று ஏக்கரில் முதியோர் இல்லம்
அமைக்கப்படும். அவர்களுக்கு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க,
இரு டாக்டர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு
இருந்தார். தமிழக அரசு மற்றும் மதுரை கலெக்டரை பாராட்டுகிறோம்.
சென்னை, லயோலா கல்லூரியில், மூத்த குடிமக்கள்
பற்றிய பாடத்திட்டம் உள்ளது. அதுபோல் பள்ளி, கல்லூரிகளில் மூத்த குடிமக்கள்
பற்றி, பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்த, அரசு பரிசீலிக்க வேண்டும்.
ஏப்., 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என, நீதிபதிகள்
உத்தரவிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக