வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களை எந்த தகுதி அடிப்படையில் தேர்வு செய்வது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
ஒரு வாக்குசாவடியில் முதன்மை அலுவலர், வாக்குசாவடி அலுவலர் 1, வாக்குசாவடி அலுவலர் 2, வாக்குசாவடி அலுவலர் 3 ஆகிய 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில், வாக்குசாவடி முதன்மை அலுவலர், வாக்குசாவடி அலுவலர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளன.
அதன்படி வாக்குசாவடி முதன்மை அலுவலராக பணியாற்றுபவர் கண்காணிப்பாளர் நிலை மற்றும் அதற்கு மேல் நிலை அலுவலராக இருக்க வேண்டும். தர ஊதியம் ரூ.4600க்கு மேல் பெறுபவர்கள் மட்டும் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும்.
வாக்குசாவடி அலுவலர் 1 ஆக நியமிக்கப்படுபவர்கள் தேர்வு நிலை உதவியாளர் அல்லது உதவியாளர் நிலை அலுவலராக இருக்க வேண்டும். தர ஊதியம் ரூ.2800 முதல் ரூ.4800 வரை பெறுபவர்கள் மட்டும் இப்பதவிக்கு நியமிக்க வேண்டும்.
வாக்குசாவடி அலுவலர் 2 ஆக நியமிக்கப்படுபவர்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் நிலை அலுவலர்கள் தர ஊதியம் ரூ.1800 பெறுபவர்கள் மட்டும் இப்பதவிக்கு நியமிக்க வேண்டும்.
வாக்குசாவடி அலுவலர் 3 ஆக நியமிக்கப்படுபவர்கள் இளநிலை உதவியாளர், உதவியாளர் நிலை அலுவலர்கள் தர ஊதியம் ரூ.1800 முதல் ரூ.2800 வரை பெறுபவர்கள் மட்டும் நியமிக்கப்பட வேண்டும்
என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக