ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் இருவருக்கான டெபாசிட் தொகையை வழங்கினர்.
இதுதொடர்பாக பொதுப் பள்ளிக் கான மாநில மேடையின் தலைவர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விடுத்துள்ள அறிக்கை:
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண்களில் தளர்வு அறிவிக்கப்படாமலே தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்த்தன. அதன் விளைவாக தமிழக அரசு 5 சதவீத மதிப்பெண் தளர்வை அறிவித்தது.
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக் கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளையும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு மையம் மாநில அளவில் நடத்தியது. பொதுப்பள்ளிக்கான மாநில மேடையோடு இணைந்து நடத்திய இந்த பயிற்சி வகுப் பால் 2013-ல் மட்டும் 43 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளனர். இந்த பயிற்சி வகுப்புகளை நடத்துவதில் முக்கிய பங்காற்றிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் விருதுநகரிலும் மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் விழுப்புரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான டெபாசிட் தொகை ரூ.25 ஆயிரத்தை, அம்பேத்கர் மையத்தில் படித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அளித்துள்ளனர். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை சார்பில் சென்னையில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அம்பேத்கர் மையத்தின் தென் சென்னை அமைப்பாளர் பி.கிருஷ் ணாவிடம் இந்தத் தொகையை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக