பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

3/04/2014

அரசு உதவி பெறும் பள்ளிகளில் அலுவலர் காலிப்பணியிடம் நிரப்ப கோரிக்கை

தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் ஆசிரியரல்லாத அலுவலர் காலிப் பணியிடம் நிரப்பப்படாததால் கல்விப்பணிகள் பாதிப்படைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சுமார் 8395அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத அலுவலர் பணியிடங்களை கல்வித்துறை அனுமதியின் பேரிலேயே நிரப்ப முடியும். கடந்த 2010ம் ஆண்டிற்கு பிறகு இப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத அலுவலர்கள் இல்லாததால் ஆசிரியர்களே இலவச பாடப்புத்தகம், புத்தகப்பை, வரைபடம், செருப்புக்கான கால் அளவு எடுப்பது, தினந்தோறும் செய்ய வேண்டிய அலுவலகப் பணிகள் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டியதுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுக்க முடிவதில்லை. மேலும் பொதுத்தேர்வு நடக்கும் காலங்களில் தலைமையாசிரியருடன் சென்று வேறு பள்ளிகளில் தேர்வுப்பணி செய்ய வேண்டியுள்ளதால் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு உள்ளிட்ட மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள் கூறுகையில், நலத்திட்டம் வழங்கவும், அலுவலக பணிக்கும் ஆசிரியர்களை பயன்படுத்துவதால் மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்களில் பின் தங்கிய நிலையில் உள்ளனர். இதனால் ஆசிரியர்களுக்கு கடும் மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே ஆசிரியரல்லாத அலுவலர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக