சிவகங்கை, : சிவகங்கையில் ஆசிரியர் உரிமை இயக்கம் சார்பில் உண்ணாவிரத
போராட்டம் நடந்தது. ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு விதிமுறைகளை பள்ளி
கல்வித் துறை நடைமுறைப்படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் நியமனம்
செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன நாள் முதல் பணி வரண்முறை செய்ய
வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் உரிமை இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரடெரிக்ஏங்கல்ஸ், சதீஸ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முத்துச்சாமி நன்றி கூறினார். இதில் 12க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக