பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு வினாத்தாள்களின் வடிவமைப்பில் திருப்புதல் தேர்வுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர். பத்தாம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு, பருவத்தேர்வு நடத்தப்படுகிறது. அரையாண்டு தேர்வு முடிந்து அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படும்.
இத்தேர்வு ஓராண்டுக்குரிய முழுமையான பாடத்திட்டம் அடிப்படையில் அரசு பொதுதேர்வு போல் நடத்தப்படும். தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்கள் தவிர கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் ஆகிய தேர்வுக்கான வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழியிலும் இருக்கும். ஆனால் பொதுத்தேர்வுக்கு முன் திருப்புதல் தேர்வு நடத்தப்படும் போது தமிழில் மட்டுமே வினாக்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது.
அரசு பொதுத்தேர்வில் இரண்டு மொழி யிலும் இருக்கும் வினாத் தாளை பார்த்ததும் மாணவர்களுக்கு சற்று குழப்ப நிலை ஏற்படுகிறது. திருப்புதல் தேர்விற்கு அச்சிடப்படும் வினாத்தாள் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட அளவில் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் திருப்புதல் தேர்விற்கு, பொதுத்தேர்விற்குரிய வினாத்தாள் வடிவமைப்பில் இரண்டு மொழிகளிலும் வினாக்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் தமிழில் மட்டுமே உள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே படிக்கின்றனர். அரசு பொதுத்தேர்வு என்றவுடன் ஒருவித பய உணர்வு ஏற்படும்.
இந்த நிலையில் வினாத்தாளை பார்த்ததும் குழப்பம் ஏற்படுகிறது. எனவே திருப்புதல் தேர்விற்கு பிற மாவட்டங்களைப்போல் இரு மொழிகளில் வினாக்கள் அச்சிடப்பட்ட வினாத்தாள் வழங்கப்பட வேண்டும் என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக