தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு
ஓட்டு போட வழிவகை செய்ய வேண்டும்
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
சிவகங்கை,மே.5-தேர்தல் பணியில் ஈடு பட்ட ஆசிரியர்களுக்கு ஓட்டு போட வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தியுள்ளனர்.வாக்குரிமைதமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் ஜோசப் ரோஸ், மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி, மாவட்ட செயலாளர் தாமஸ் அமல நாதன் மற்றும் நிர்வாகி கள் சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.குணசேகரன் தலைமையில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ராஜா ராமனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த பாராளு மன்ற தேர்தலின் போது, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர் களில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்தல்பணி சான்று வழங்காததால் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியவில்லை. எனவே அவர் களுக்கு தங்களது ஓட்டுக்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தரக்குறைவாகஇதே போல் தேர்தல் பணிக் காக சிவகங்கையில் காத்திருப் போர் பட்டியலில் இருந்த ஆசி ரியர்களை தரக்குறைவாக பேசிய தேர்தல் உதவி கண் காணிப்பாளர் மீதும், எஸ்.புதூர் யூனியன் செட்டிக் குறிச்சியில்தலைமை ஆசிரிய ராக பணிபுரியும் சுதர்சனை தரக்குறைவாக பேசிய வரு வாய் ஆய்வாளர் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக