கூடலூர்: கூடலூர் புளியாம்பாறையில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி வெளியிட்டுள்ள நோட்டீஸ் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆங்கிலத்தின் மீதுள்ள ஆர்வம்; தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளை தனியார் ஆங்கில பள்ளிகளில் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், நகர் புறங்களுக்கு அடுத்ததாக, கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளும் மூடப்படும் சூழல் உருவாகி வருகிறது. இதனை தடுக்கும் வகையில், அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வியை படிப்படியாக கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில், மாவட்டத்தில் தற்போது, 27 அரசு பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு பள்ளி குறித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. உதாரணமாக, கூடலூர் புளியாம்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவங்க பள்ளி, நிர்வாகம், தனியார் பள்ளிகளுக்கு இனையாக துண்டு பிரசுரங்களை வெளியிட்டுள்ளது.
அதில், ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவர்களுக்கு தரமான கல்வி; அரசு சார்பில் கிடைக்கும் அனைத்து இலவச திட்டங்கள்; பள்ளியில் உள்ள ஆங்கில பிரிவு போன்ற தகவல்களை வெளியிட்டுள்ளது. இதனை வரவேற்றுள்ள பல பெற்றோர்கள், அந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக