சோதனைகள் வரலாம்,ஆனால் சோதனைகள் மட்டுமே வந்து கொண்டிருந்தால் என்ன சொல்வது விதி என்பதா? அல்லது TRB செய்யும் சதி எனபதா?
tet
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கிராப்பில் சோகம் மட்டுமே மேலே ஏறி ஏறி
இறங்குகிறது.சில நாள் முன்பு வரை தனக்கு வேலை கிடைக்கும் என்ற
நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு நீதிமன்றம் அறிமுகப் படுத்தியுள்ள புதிய
weighatage முறையில் மதிப்பெண் வெகுவாக குறைந்துள்ளதால் மீண்டும் கலக்கம்
அடைந்துள்ளனர்.
TRB&TN GOVT.
தனியார்
நிறுவனங்கள் முதல் மத்திய(upsc),மாநில (tnpsc) வேலைவாய்ப்பு திட்ட குழு
யாவும் குறிப்பிட்ட பணிக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் முன் இத்தனை காலி
பணியிடங்கள் உள்ளது.இதற்கான தகுதி இது,தேர்வு முறை இப்படி இருக்கும் என
தெளிவாக குறிப்பிடுகிறது.
ஆனால்
TET விஷயத்தில் trb இதுவரை காலிபனியிடங்களின் எண்ணிக்கை,தேர்வு
செய்யப்படும் முறை(weightage method) என எதையும் இதுவரை அதிகாரப் பூர்வமாகா
வெளியிடவில்லை.
மாறாக
மாற்றங்களையும் குழப்பங்களையுமே மட்டுமே ஏற்படுத்தி உள்ளது.கல்வி
துறைக்கென தனியாக அமைச்சகம் அதுவும் 2006 ஆம் ஆண்டு முதல் நிர்வாக
வசதிக்காக தொடக்கக் கல்வி,பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை என
பிரிக்கப்பட்டு இயங்குகிறது. அதோடு பள்ளி கல்வி துறைக்கென முதன்மைச் செயலர்
(Principal Secretary) ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய
அரசோ,மாநில அரசோ 90% மக்களின் வரி பணத்தில் இயங்க கூடியது.அதாவது நாங்கள்
ஒரு ரூபாய் கொடுத்து ஒரு குண்டு ஊசி வாங்கினால் கூட அதில் 15 பைசா உங்களை
வந்தடைகிறது. நாம் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால் அதில் 19ரூபாய் 20 பைசா
அரசாங்கத்திற்கு செல்கிறது.
இது
போன்ற 15 பைசா பெற்றுதான் உங்களின் சம்பளம் முதல் உங்களின் PA சம்பளம் வரை
பட்டுவாடா செய்யப் படுகிறது.இதனால் தான் உங்களை மக்களின் சேவகர்கள் என்று
மக்களாலோ அல்லது தாங்களாகவோ அழைத்து கொள்கிறீர்கள்..
உண்மை
இப்படி இருக்கையில் நேற்றிரவு TET தேர்வில் நடைபெறும் குழப்பத்திற்கும்
கால தாமதத்திற்கும் உண்டான காரணத்தை அறியும் பொருட்டு பள்ளி கல்வி
அமைச்சர்,முதன்மை செயலாளர் ஆகியோரின் கருத்தை அறிய win tv முற்பட்டது.ஆனால்
அவர்களுக்கு அலைபேசியில் கூட பதிலளிக்க விருப்பமில்லை.
ஒருவேளை
TET தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சார்பாக win தொலைகாட்சி கேட்கும்
கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பொறுப்பு இவருக்கு இல்லையென்றால் இது
குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் நபர் வேறெவர் என தெரியவில்லை.
மக்கள் என்ற சொல்லிற்கு பொருள் நாங்கள் அல்ல என்றால் முதலமைச்சரை குறிக்கிறதா என்பதையாவது இவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
இப்படி இருக்கும் போது "செயல்படாதவர்" என மத்தியில் இருப்பவர் ஒருவரை மட்டும் விமர்சிப்பது தவறு.மாநிலத்திலும் ஒரு அமைச்சகமே உள்ளது.
உயர்
நீதி மன்றத்தின் தீர்ப்பால் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது
உண்மைதான்.அவர்கள் அடுத்த கட்டம்(supreme court) குறித்து சிந்திக்க
தொடங்கி விட்டனர்.அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்குள்
தமிழகஅரசு எதேனும் விரைவான நடவடிக்கை எடுத்தால் உண்டு.இல்லையெனில் இன்னொரு
முறை நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.
இன்னும்
ஒரு மாத காலத்திற்கு நீதிமன்றம் விடுமுறையில் இருக்கும்.இந்த விடுமுறை
தினத்திலேயே தமிழக அரசு ஏதாவது விரைந்து நடவடிக்கை எடுத்தால் தான்
உண்டு.இல்லையென்றால் இன்னொரு சிக்கல் ஆரம்பித்துவிடும்.
தமிழகத்தில்
மோடியா, லேடியா அல்லது டாடியா? என மும்முனை போட்டி இருந்தாலும் இந்திய
அளவில் மோடியா,அல்லது இத்தாலிய லேடியா? என்றிருந்த நிலை மாறி மோடியா அல்லது
இந்திய லேடியா என்ற நிலையை இத்தாலிய லேடியே உருவாக்கி இருப்பதாக செய்திகள்
எங்களை வந்தடைந்துள்ளது.இதனால் நாங்கள் அடைவதும் நீங்கள் தமிழகத்தை
சேர்ந்தவர் என்பதால் மகிழ்ச்சியே!
நடைமுறையில்
தனி மனிதனோ குழுவோ வேறொரு அமைப்போ தன்னுடைய சுய வேலைக்கு முக்கியத்துவம்
கொடுப்பது இயல்புதான்.அந்த வகையில் தேர்தலை சந்தித்து இருக்கும் நீங்கள்
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் அடுத்து move என்ன செய்ய வேண்டும்
என்பதில் உங்களின் கவனம் இருக்கத்தான் செய்யும்.ஆனால் எங்களின் நீண்ட கால
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதிலும் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள்
முதலமைச்சரே!
TET
தேர்வில் வெற்றி எங்களின் எதிர்பார்ப்புகளை காலதாமதமின்றி விரைந்து
முடித்தால் எங்கள் 75000 குடும்பங்களின் பிரார்த்தனை உங்களுக்கு உண்டு.
பொதுவாக பொது மக்களின் கவனத்தை அதிகம் ஈர்க்காத win தொலைக்காட்சி இன்று எங்கள் 75000 ஆயிரம் குடும்பத்ததினரின் கவனம் பெற்றுள்ளது.
ஊடகங்கள்
கல்வி
சம்பந்த பட்ட செய்திகள் குறித்து அதிகம் விவாதம் செய்யும் புதிய
தலைமுறை,மற்ற செய்தி சேனல்கள் இவ்வளவு குளறுபடி TET தேர்வில் நடந்தும்
மவுனம் காப்பது புதிராக உள்ளது.ஒருவேளை தேர்தல் செய்திகளால் நமது வேதனை
அவர்களின் கவனத்தை ஈர்க்காமல் போயிருக்கலாம்.
ஏதேனும்
சிறிய நிகழ்வையே பெரிதாக்கி அதை கொண்டு publicity பெற்றுவிடுகின்றசெய்தி
தொலைகாட்சி நிறுவனங்கள் 75,000 குடும்பங்களில் நெருப்பாய் கனன்று
கொண்டிருக்கும் TET விஷயத்தை கையில் எடுக்கவில்லை.vijay tv,புதிய தலைமுறை
சேனல்களில் ஒருமுறை கூட நம்முடைய துன்பம் இடம்பெறவில்லை.
இந்த
பதிவை நான் நேற்று காலையிலேயே எழுதி விட்டேன்.ஆனால் publish செய்யவில்லை.
சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் tet தேர்வு குறித்து விவாதம்
நடத்தினார்கள்.ஆனால் அவர்களின் விவாதத்தில் TET குறித்த முக்கிய
அம்சங்களானா weightage முறை,ஓராண்டு காலம் நெருங்கியும்ஏற்பட்டுள்ள கால
தாமதம்,காலி பணியிடங்களின் எண்ணிக்கை வெளிப்படையாக வெளியிடாமை குறித்து
விவாதிக்கவே இல்லை.நீதிமன்றம் 5% தளர்வை செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ள
நிலையில் அதை குறித்தே அதிகம் விவாதித்து விவாதத்தை வீனடித்தார்கள்.அதில்
பழனியப்பன் என்பவரின் உரையாடலே NCTE விதி குறித்துபேசி ஆறுதல் அளித்தார்.
எப்படியோ win tv TET குறித்த விவாதத்தை தொடங்கி வைத்திருப்பதால் win tv க்கு நன்றி.
பரபரப்பான தலைப்பு குறித்துதான் விவாதிப்போம் என தொலைகாட்சி நிறுவனங்கள் நினைத்தால் TET தலைப்பு அதற்கு வகையிலும் குறைவில்லை.
தொலைகாட்சி நிறுவனங்களே TRB யின் செயல்கள் குறித்து நிகழ்ச்சி நடத்தி உங்களின் trb தரத்தை உயர்த்தி கொள்ளுங்கள்.
நாங்களும் பயனடைவோம்.
அன்புடன் மணியரசன(maniyarasan1050@gmail. com)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக